53
53 முத்தன் : என்ன! எனக்கு விடுதலையா?' , வேலழகன் : சிரித்தபடி வந்து கொண்டு) விடுதலை தான், இங்கிருந்து உனக்கு விடுதலைதான், வீணனே! இந்த விடுதலைக்குப் பிறகு நீ போகவேண்டிய இடம் எது தெரியுமா? வீடல்ல - வேங்கைபுரம்! - முத் : என்ன! ஏன் இப்படி கொடுமை புரிகிறீர்கள்? உங்கள் அபராதத் ெ தாகையை வாங்கிக்கொண்டு என்னை விடுதலை செய்யவேண்டியதுதானே நியாயம்? வேல : அபராதப் பணம் - அரைக்காசுக்கு வழியற்ற உன்னிடம் ஏது அபராதப் பணம்? ஹ ஹ ஹ... ... முத்: என்னை இப்படி சிறையிலே அடைத்து வைத்தால் எப்படி செலுத்த முடியும் உங்கள் அபரா தத்தை? வெளிலே விடுங்கள்... வினாடியில் கொண்டு வருகிறேன். வேல : முடியாது-இங்கே வரவேண்டும்! போது வந்தாலும் சரி; உன்னை விட்டுவிடுவேன். . [வேதாளம் வருகிறான்] முத்: (வேதாளத்திடம்) கிடைத்ததா? வந்து சேர்ந்ததா? விட்டது. என்ன இப் ஆயிற்று? வேதா : ஊஹும்! காத்துக் காத்து காலும் ஒடிந்து கண்ணும் பூத்துவிட்டது. காரியம் ஆகவில்லை. (வேலழகன் பக்கம் திரும்பி) பிரபு அவர்களே! அபராதப் பணம் விரைவில் வந்துவிடலாம். கொஞ்சம் தாமதித்து ரோன் வேல : சேவல் கூவவில்லையே என்று செங்கதி காத்திருப்பதில்லை. கடமையை நான் செய்ய வேண்டும்-இல்லையேல் காவலன் சீறுவார்...ம். புறப்பட வேண்டும். விடுதலை வீரனே! நீயும் நட பின்னால். முத்: நடக்கமாட்டேன்! ரத்தச் சகதியிலே தங்கள் தலைகளை செந்தாமரை மொட்டுகளாக ஆக்கிவிடத் தீர்மானித்து விட்ட விடுதலை வீரர்கள், ஆதிக்க வெறியர் களின் பின்னால் ஆடுபோல் நடக்கமாட்டார்கள்! பழுதூர்