55
55 (முத்தாயி ஓடிவருகிறாள் குறும்பனைப் பார்த்து] முத்: அய்யா... அய்யா!... நீங்கள் வேங்கை நாட்டு வீரர்தானே? குறு : ஆமாம்... என்ன வேண்டும்?... முத் : அவரை விடுதலை செய்து விட்டார்களர்?... குறு : யாரை? : முத்: முத்தனை! குறு : ஓ!... விடுதலை செய்து விட்டார்களே!... அவனை விடுதலை செய்து, பிரமாதமான மரியாதைகளோடு அதோ அழைத்து வருகிறார்கள்!... முத் : ஆ!... என்ன?... (முத்தாயி ஓடுகிறாள் மகிழ்ச்சியுடன். முத்தன் அடிபட்டு கீழே கிடக்கிறான்...] முத்தன்: அடியுங்கள்!... நன்றாக அடியுங்கள்!... என் இருதயத்தில் எழுச்சிக் கனல் கனல் பொங்கப் பொங்கப் பொங்க அடியுங்கள்!... இப்படித் தவறு செய்யாதவர்களை அடித்து அடித்துத் தானய்யா தரைமட்டமாகப் போயிருக்கிறது பல தான் தோன்றிகளின் தர்பார் மண்டபங்கள்!... அடி யுங்கள்; பாதகர்களே அடியுங்கள்!... [கூட்டத்தை விலக்கிக்கொண்டு முத்தாயி பார்க்கிறாள்.] முத்: அத்தான்!... முத்தன்: முத்தாயி!... கேட்கவில்லையே!... ஐயோ, ஐ இப் முத்: அத்தான்... அத்தான்!... என்னத்தான் படிச் செய்து விட்டீர்கள்?... நான் அவ்வளவு சொல்லியும் அத்தான்... இந்த கோலக் காட்சிபை நான் காணவேண்டும்என்று எத்தனை நாளாகக் காத்திருந்தீர்கள் அத்தான்?... அலங் முத்தன்: அழாதே முத்தாயி, அழாதே!... இது ஒன்றும் அலங்கோலக் காட்சியல்ல...கத்திமுனைகளையும்,... கட்டாரி வீச்சுக்களையும் நம்பி வாழும் காட்டு மிராண்டி களின் கொலுமண்டபத்திலே எத்தனை எத்தனை வீரர்கள் தங்கள் உயிர்களையே காணிக்கையாக தந்திருக்கிறார்கள்...