4
சுக: சரி சரி; ஆனா முத்தா இந்தப்படத்திலே இருக்கிறமாதிரி ஒரு பெண்ணு உலகத்திலே இருந்தா நான்தான்அதை கல்யாணம் பண்ணிக்குவேன்.
முத்: உம்; இல்லாததைபற்றிப் பேசுவானேன்.
சுக: சரிதான். உலகத்திலே பேசறதே இல்லாததைப் பத்தித்தான்... சரி நீ வரவில்லையா மடத்துக்கு.
முத்: ஊ கூம். [முத்தன் நண்பர்கள் வருகிறார்கள்]
நண் : என்ன முத்தண்ணா சுகந்தானா?
முத்: இது என்ன சுந்திர பூமியா சுகமாயிருக்க? சுகவாசி இதோ இந்த மடத்துக்குள்ளே இருக்கிறார் மாய்கைநாத சாமியார்.
மாய்கை: அகில ஜெகத்திற்கும் அம்மையப்பன் அருள் சித்திக் கட்டும் ... அடியார்க்கு அடியார்களே! அன்பு நிறைந்த பக்தர்களே!... ... அய்ய வினாக்கள் ஏதேனும் இருப்பின் கேட்டுத் தெளிவு பெறுக... ... ...
சுகதேவ்: அம்மையப்பன் என்பதற்கு அர்த்தம் என்ன ஸ்வாமி... ... ...
மாய்கை: அடடா, இதுவா புரியவில்லை——இளவரசே. ?இதோ இருக்கும் பாளையக்கார பலதேவர் உமக்கு... சுகதேவ்: அப்பா !......
மாய்கை : சரி, அவர்கள்......?
சுகதேவ்: அம்மா !.......
மாய்கை: அம்மா..... அப்பா...... அம்மையப்பா.
சுகதேவ்: அடடே! அப்படியானால் நீங்கள் தோஸ்த்தரிப்பது என் அம்மாவையும் அப்பாவையும் தானா!
மாய்கை: கேளும் உமக்கு ஒரு அம்மையப்பன் இருப்பது போலவே, உலக மக்களுக்கும் ஒரு அம்மையப்பன் இருக்கிறார்கள்.