பக்கம்:அம்மையப்பன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

முத்: 58 கிடைக்கவில்லை - கிடைத்ததை வாயில் போட் டுக் கொண்டாய். சும : என்னையும் கொஞ்சம் பேசவிடேன்...... முத் : பேசியது போதும். பேசியும் பலனில்லை. போ... போய் விடு... உம்... போய்விடு பாவி.. போ...... சும : இப்போது :என்னை உணராவிட்டாலும், எப் போதாவது உணராமலா இருக்கப் போகிறாய்? நான் வரு கிறேன். முத்தாயி: வரவே வேண்டாம்-வஞ்சகி! சுகதேவ் மாளிகை சுகதேவ் : நானும், முத்தாயியும் காந்தர்வ மணம் புரிந்து கொண்டோம். என்னை மறக்கமாட்டேன் என்று கடவுள் மேல் சத்தியம் செய்தாள். திரிசங்கு: அப்படியா! வைர சுக : நந்தவனத்திலே ஓடினோம் - நதியிலே நீராடி னோம்- முத்தாயி' என்றேன்-அவள் 'நாதா' என்று கூப் பிட்டாள்-கண்ணை அசைத்தாள்...கழுத்துக்கு மாலை- அவள் இடை நெளிந்தது.. நெளிந்தது...இரத்தின ஒட்டியாணம் பூட்டினேன்- நகைகளைப் போட்டுக் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தாள்... சிங்காரி! ஒய்யாரி! கண்ணே! மயிலே! கட்டி லறைக்கு வாடி என்றேன்- வரவும் இசைந்தாள்... அதற் குள் விழித்துக் கொண்டேன்... எல்லாம் கனவு திரிசங்கு! எல்லாம் கனவு! திரி : வரையில்! கனவாகாது தம்பி; இந்தத் திரிசங்கு இருக்கும் சுக : தங்கமும், வைரமும் தயார்..... அதை சங்கிலி யாக்குவதற்கு என் தகப்பனார் சம்மதிக்க வேண்டுமே.... திரி: அதற்குத்தான் கொஞ்சம் கஷ்டப்படவேண் டும். சுக : கஷ்டமா? திரி : ஆமாம்!... அர்ச்சுனன் பாம்பானான் அல்லியை மணக்க ... வேலன் கிழவனானான் வள்ளியை மணக்க...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/60&oldid=1723595" இலிருந்து மீள்விக்கப்பட்டது