60
60 விட்டு பிறகு மற்ற ஏற்பாடு நடக்கட்டும்; ஆமாம்! [முத்தாயி வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கிறாள். திரி சங்கு வருகிறார்] திரிசங்கு: முத்தாயி! முத்தாயி! என்னம்மா இப் படி வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்? முத் காரணமா கேட்கிறீர்கள்? . திரி: நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதற் காகத் தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். முத்: அப்பா! போதும்! [அழுகிறாள்] திரி : இப்போது என்னம்மா வந்து விட்டது? ஆறு தலாக இரு! முத் : மல்லிக்கைக் கொடியின் வேரை அறுத்து விட்டு அதன் மலருக்கு நீர் ஊற்றி என்னப்பா பயன்? உ திரி : வேரை ற்சாகமாயிரு, ம நான் அறுக்க மாட்டேனம்மா. த்திலே குருபூஜை வேறு நடக்கப் போகிறது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமாயிருக்கும். நீயும் குதூகலமாயிரம்மா... முத் : ஒளிக்குப் பக்கத்திலே இருந்தாலும் நிழல் இருளாகத்தானே இருக்கும். உற்சாக நிகழ்ச்சிகள் எவ்வளவு இருந்தாலும் என் உடைந்த உள்ளத்திற்கு மருந்தேது தந்தையே? திரி : கவலைப்படாதே! எல்லாம் உன் இஷ்டப்படியே நடக்கும். நான் செய்த தவறுகளை மறந்துவிடு. பாழும் பொருளாசையால் பைத்தியக்காரன் போல் நடந்துவிட் டேன். உங்கள் தூய்மையான அன்பைத் துண்டாட நினைத்த இந்த துரோகியை மன்னித்துவிடம்மா. முத்: அப்பா! அப்பா! திரி: அழாதே! உன்னையும், முத்தனையும் சேர்த்து வைக்கத் தீர்மானித்துவிட்டேன். முத்: என்னப்பா சொல்கிறீர்கள்? திரி : கேளம்மா- நீ முத்தனைக் காதலிக்கிற விஷயம் பாளையக்காரருக்கு தெரிந்துவிட்டது. சுகதேவனுக்கும்.