62
62 வீரன் 2 : உம்... என்ன பண்றது? நம்ம அம்மா நம்மை பெத்த நேரம் அப்படி! வீரன் 3 : எழுதி இருக்கு! அடிமையாய் வாழணும்னு தலையில் முத்: பெற்ற நேரத்தை குறைகூறாதே தம்பி!... நாமெல்லாம்-விடுதலை வீரர்களாய் வாழவேண்டும் என்ற தாய் மார்களுக்கு ஏற்படவில்லை.. உம்... தாய்மார்கள் வாழ்ந்த கவலை நமது அதெல்லாம் புறநானூற்றுத் காலத்தில்... வீரன் 4: புறநானூறு... புறநானூறுன்னு அடிக்கடி சொல்றியே அது என்ன அண்ணா?... முத்: தமிழகத்துத் தாய்மார்களின் வீரக்காதை அது... அதைப்பற்றி எளிய நடையில் நானே எழுதிவைத் திருக்கிறேன் ஒரு கவிதை... சொல்கிறேன் கேள்... குடிசைதான்! ஒருபுறத்தில் கூறிய வேல், வாள் வரிசை யாய் அமைத்திருக்கும். வையத்தை பிடிப்பதற்கும் வெம் பகை முடிப்பதற்கும் வடித்து வைத்த படைக்கலம் போல் மின்னும் மிளிரும். புலியின் குகையினிலே அழகில்லை..... புதுமையல்ல! கிலியும் மெய்சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலை காட்டா மானத்தின் உறை விடம்; மறவன் மாளிகை! இல்லத்து வாயிலிலே கிண்ணத் துச் சோறோடு வெல்லத்தைச் சிறிதுகலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் யெடுத்துப் போட்டாள்; பெருநரைக் கிழவி யொருத்தி ... ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான்... ஆடி வந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்; ஆண்மகனா நீ தம்பி..மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்;பின்பு பேச்சுக்குத் துவக்கம் செய்: என்றாள்; அந்த கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி... வேடிக்கை நேரம் இது வல்ல பாட்டி; உன் வாடிக்கை கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்தில் என்றான்... மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஓர் முறை... தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு.. களமும் அதுதான்... காயம்