பக்கம்:அம்மையப்பன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63 மார்பிலா முதுகிலா என்றாள்! முதுகிலென்றான். கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்; வாளை எடுத்தனள் முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள்வேகம்... கோழைக்குப் பால் கொடுத்தேன்-குப்புற வீழ்ந்து கிடக் கும் மோழைக்குப் பெயர் போர் வீரனாம்!... அன்றொரு நாள்... பாய்ந்து வந்த ஈட்டிக்கு பதில் சொல்ல மார்பைக் காட்டி சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர் அவருக்குப் பிறந்தானா?.... அடடா மானம் எங்கே ?... குட்டிச்சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான்... இமயவரம் பினிலே வீரம் சிரிக்கும் இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்...அதுவும் மானம் மானம் என்றே முழக்கும்- மதுவும் சுறாவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ... ஏடா, மறத்தமிழ் குடியிலே மாசு தூவிவிட்டாய்... தின்று கொழுத்தாய்?- திமிர்பாய்ந்த தோள்கள் எங்கே? திணவெடுக்க வில்லையோ- அந்தோ என்று அலறினாள். எண்பதை நெருங்கிய ஏழைக்கிழவி - சென்றங்கு செறு ஏழைக்கிழவி-சென்றங்கு முனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப் புறட்டிப் பார்த்தாள்...அங்கு நந்தமிழ் நாட்டைக்காக்க ஒடிட்று ரத்தவெள்ளம்! பிணக்குவியலிலே பெருமூச்ச வாங்க நடந் தாள் ... மணப்பந்தலிலும் அந்த மகிழ்ச்சி இல்லை.. மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்புகாட்டி! அறுத்தெரிய இருந் தேன் அவன் குடித்த மார்பை-அடடா கருத்தரியப் பொய் சொன்ன கயவனெங்கே?... வாளிங்கே...அவன் நாக்கெங்கே? வீரர்கள் : ......... முத்: இப்போது சொல்லுங்கள். மானமும், வீர மும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை. அவைகளை மாற்றா னின் காலடியில் மிதிக்க விடலாமா? வீரர்கள் : கூடாது!...கூடாது! ம முத்: அப்படியானால் பழுதூரை விடுவிக்க என் தலைமையில் ஒன்று சேருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/65&oldid=1723601" இலிருந்து மீள்விக்கப்பட்டது