65
65 வேதாளம் (விரல்களைக் காட்டி) நிச்சயமாக தம்பீ!... இரண்டிலே ஒன்று தொடுங்க! (தொடுகிறான்) - வேதா : ஆ!... கட்டாயம் வருவாள் தம்பீ... சுக : வருவாளா?... வேதா : சரி!... ஒரு பூ சொல்லுங்க தம்பீ!.. சுக : பூ!... இதுதானா? புளியம்பூ வேதா : ஏன் இந்த வம்பு!. நானே போய் முத்தா யியை அழைத்துக் கொண்டு வருகிறேன்... நீங்கள் இங் கேயே இருங்கள்... இப்போே இப்போதே வருகிறேன். வேங்கைபுர பாசறைச் சிறை [முத்தன் சிறையில் இருக்கிறான்...அவனது தோழர்கள் பதுங்கிப் பதுங்கி வந்து அவனை விடுவிக்கிறார் கள்... அவன் அவர்கள் காதில் ரகசியம் கூறி செல் கிறான் முத்தனை விடுவிப்பதை மறைந்து இருந்து கவனித்த வேங்கைபுரவீரர்கள்...பாய்ந்து வந்து அவனை பிடித்து விடுகின்றனர். உடனே வேலழக னிடம் இழுத்துக் கொண்டு போகிறார்கள்] தளபதி மாளிகை வேலழகன் : என்ன?... குறும்பன் : வேதாளம் வந்திருக்கிறான். வேல: வேதாளமா?... வரச் சொல் வரச் சொல்... வேல : வாரும் வேதாளம்... வெற்றியோடுதான் வந் திருப்பீர் என எண்ணுகிறேன்...
வேதா : வெற்றியின் ஆரம்பம்தான் பிரபு!-நமது புறா புதிய வேடனிடம் சிக்கி இருக்கிறது! வேல : என்ன?... என்ன?... வேதா : சொல்கிறேன் ... சுகதேவனுக்கும் முத்தா யிக்கும் ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திரு மணம்... - வேல : ஆ!...