66
66 வேதா : நான்தான் ஏற்பாடு செய்தேன்... வேல: (கோபமாக) என்ன?... வேதா: வாருங்கள் முத்தாயியை உங்களிடம் சேர்ப்பதற்காகவே இந்த சூழ்ச்சியை ஆரம்பித்திருக் கிறேன்... வேல : புரியும்படி சொல்லும்... வேதா : நான் சொல்கிறபடி நீங்கள் செய்ய வேண் டும்... சுகதேவனுக்கும் முத்தாயிக்கும் திருமணம் நடக்கப் போகிறது... தாங்கள் முத்தனை உடனே அங்கு அனுப்ப வேண்டும்... முத்தன் போனால் முத்தாயி அவனுடன் ஓடி வருவாள்... இருவரும் தப்பி வரும்போது நாம் முத்தனை துரத்தி விட்டு முத்தாயியை மட்டும் அபகரித்துவிட வேண் QLD... வேல : நல்ல யோசனை. முத்தன் நம் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால்?... வேதா : உம். காதல் மயக்கத்தில் எதையும் யோசிக்க மாட்டான்... ஓடுவான் கழுதை வீரன் (வருகிறான்.) வீரன் : பிரபு' முத்தன் சிறையிலிருந்து தப்பியோடி னான் பிடித்து வந்திருக்கிறோம்... வேல்: எங்கே?... கொண்டு வாருங்கள்... வேதாளம்; நீர் சற்றுமறைந்திரும் (முத்தன் இழுத்துவரப்படுகிறான்.) வேல : சரி! நீங்கள் போகலாம். ஹி...ஹி ஹி... முத்தா !...நீ சிறையிலிருந்து தப்பி ஓடாவிட்டாலும் நானே உன்னை விடுவித்து அனுப்புவதாக யோசித்துக் கொண்டிருந் தேன்... நல்ல வாலிபனே !... உன்னை நான் மிகவும் கஷ்டப் படுத்திவிட்டேன்...வருந்துகிறேன், அதற்காசு... க முத்: அய்யா! திடீரென்று மாறிவிட்டீர்களே..... நான் திக்கற்றவன் என்பதை எப்படி உணர்ந்தீர்கள்?. தெய்வமும் வந்து சொல்லி இருக்க முடியாதே! வேல : மனிதனுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறது. மனிதன் மிருகமாக மாறும் போது அந்த