67
67 மனச்சாட்சி புழுவாக மாறி அடங்கிக் கிடக்கும். மிருகத் தன்மை தோல்வி அடையும் நேரத்தில் புழுவாகிப்போன மனச்சாட்சி புள்ளி மயிலாக எழுந்து நடனமாடும்... அந்த ஆட்டத்திலேதான் உண்மையின் அழகு ஒளிவிட ஆரம் பிக்கிறது. முத்: ஆகா! சிறப்பான கருத்து இந்த இடத்திலே யும் முளைக்கிறது, சேற்றிலே செந்தாமரை முளைப்பதைப் போல... வேல : முத்தா! என் கண்ணைத் திறந்துவிட்ட செய்தி எது தெரியுமா?... உன் அன்புக் காதலி முத்தா யியை அந்த சுகதேவன் பலவந்தமாக மணம் புரியப் போகி றான்... முத் : உண்மையாகவா?.. வேல: ஆமாம்! ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகை யிலே திருமணம்... அவள் ஆவி பிரிவதற்கு முன்னாள் நீ ஓடு... முத்தா! எனக்கேன இப்போது இவ்வளவு அக்கரை என்று கருதுவாய். லைலாமஜ்னு கதை படித்திருப்பாயே நீ... லைலாவின் கணவன் அவளை அவன் காதலன் கயசிடம் திருப்பி அனுப்பிய நிகழ்ச்சிக்கும் இதற்கும் அதிக வேறு பாடில்லை... முத்தா! ஒன்று சொல்கிறேன்... நீயும் முத்தாயியும் என் பாதுகாப்பிலேயே குடும்பம் நடத்தலாம் அதற்கென்ன இப்போது, அவசரம்!...... உடனே போ உன் உயிரிணையாளைக் காப்பாற்று... [உள்ளே போய் சிறந்த ஆடைகளை எடுத்து வந்து] இளைஞனே! இப்போதே ஓடு... இழந்த காதலை பெற்றிடு ... இந்தா அழகான உடைகள். அணிந்து கொள்... ஆனந்தமாக திருமணத்தை முடித்துக் கொண்டுவா!... முத் : மிகவும் நன்றி உடையவனய்யா நான்... [வேகமாகப் போகிறான். அதற்குள் கேட்கிறது. மறைந்து கவனிக்கிறான்.] சிரிப்பொலி வேதாளம்: சபாஷ் பிரபுவே! மிகவும் நன்றாக நடித்து விட்டீர்கள்.