பக்கம்:அம்மையப்பன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சுகதேவ்: அவர்கள் எங்கு இருக்கிறார்களோ?—

மாய்கை : கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள்!—

சுகதேவ் : பிள்ளைகளாகிய நாம் கண்ணுக்குத் தெரியும் போது, பெற்றவர்களும் தெரிய வேண்டியது தானே.

மாய்கை : தவறு !... தெரிய மாட்டார்கள் அந்த தெய்வப் பெற்றோர்கள் — அவர்கள் அரூபிகள் — அண்ட சரா சரங்களையும் படைத்து அழிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்... ஆயிரம் நாமம் படைத்தோர்... பாயிரம் பலவற்றால் பாராட்டப் பெற்றோர் ... இகபரம் சுகதுக்கம் ... தூண் துரும்பு .. அங்கு ... இங்கு எங்கும் பிரகாசமாய் இருப்போர்... என்ன சுகதேவ் குழப்பம் முடிவுற்றதா?...

சுகதேவ்: இப்போது தானே ஆரம்பமே ஆகிறது

மாய்கை: அட அம்மையப்பா—

பலதேவர் : சுகதேவ் இப்படி எல்லாம் குறும்புத் தனமாக கேள்விகளை கேட்காதே; மகான்களை இப்படி யெல்லாம் மடக்குவது மகாபாபம்.......

சுகதேவ்: இல்லையப்பா தெரியாமல்தான் கேட்டேன். திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்... ...

மாய்கை: சந்தோஷம்.

அஞ்சல் மனை

வேதா: மாய்கை நாதஸ்வாமிகள்..... மாய்கை நாதஸ்வாமிகள்... ... மாய்கை நாதஸ்வாமிகள்... ...

முத்தன் : மாய்கை நாதஸ்வாமிகளுக்கு சரியான வேட்டைதான் போலிருக்கிறது.


வேதா: எல்லாம் பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகள் ......

முத்தன் : காணிக்கை ! ... ஆமாம் உழைக்காமல் கிடைக்கிற ஊதியத்துக்கு அப்படியும் ஒருபெயர் உண்டு ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/7&oldid=1769634" இலிருந்து மீள்விக்கப்பட்டது