69
. மேளதாள் . 69 பெண் திரி : மில்லையே; பந்தல் இல்லையே; பந்தி இல்லையே; என்று பார்க்கிறாயா?... இது வீடுதான். முகூர்த்தம் நடைபெறுகிற இடம் வேறிடம். அதுவுமில்லாமல்... இந்தத் திருமணம் சுகதேவுக்குக் தெரியாமல் நடைபெற வேண்டுமே... முத்: ஆமாம்... ஆமாம்... அந்த சுகதேவ்... [சுகதேவ் வருவதைக் கண்ட திரிசங்கு] மிகவும் அழகானவர் - உனக்குப் பிடித்தமானவர் என்று கூறுகிறாய் முத்: அப்பா...என்ன உளருகிறீர்கள்...! (திரும்புகிறாள். சுகதேவை வீழ்கிறாள்.) கண்டுவிடுகிறாள். மயங்கி சுக : என்ன?...என்ன?... ஒன்றுமில்லை. உங்களைப் திரி : ஒன்றுமில்லை பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிட்டது... சந்தோஷத் தால் இருதயம் படபடக்குமல்லவா... தம்பி ..? சுக : ஆமாம்!... ஆமாம்! எனக்குக்கூட இப்போது அப்படித்தான் அடித்துக்கொள்கிறது... திரி : சரி; நீங்கள் மேலே போங்கள். நான் பிறகு வருகிறேன். [சுகதேவ் போகிறான். முத்தாயி மயக்கம் தெளிந்து எழுகிறாள், திரிசங்கு விலைஉயர்ந்த நகைகளையும் உடைகளையும் எடுத்துக் காட்டுகிறான்.) திரி: முத்தாயி! இவைகளைப் பார்... முத்தும், பவள மும், ரத்தினமும், வைரமும் பதித்திட்ட ஆபரணங்கள்! பளபளக்கும் பட்டாடை!... ஜொலிக்கும் வைரம்! மதிப்பு வாய்ந்த ரத்தினம்! ஆஹா... ஹா... இவைகள் எல்லாம்.... முத்: உங்கள் மானத்திற்கு தரப்படும் விலை! உங்கள் மகள் மீது வீசப்படும் வலை!... திரி: சொல்வதைக் கேள்... திரி : எதுவும் சொல்லவேண்டாம். எல்லாம் விளங்கி விட்டது. சிப்பியே முத்தைக் கொண்டு வந்து சேற்றில்