பக்கம்:அம்மையப்பன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71 வேதா : சரிதான் போ! சாப்பாடு தயார்; சோறு தான் இல்லை என்பது போல் இருக்கிறதே! ஏனப்பா... இரு வருமே ஒன்றுபட்ட காதலர்கள் என்றீர்களே முன்பு... திரி: முத்தாயி ஒரு முரட்டுப்பெண். அவள் பிடி வாதத்தை என்னால் மாற்றமுடியவில்லை. நீங்கள் தான் எப் படியாவது... வேதா: உம்... முயற்சிக்கிறேன்... இப்போது அவள் எங்கே இருக்கிறாள்? திரு : உள்ளே தான் இருக்கிறாள். ரு : வேதா : சரி நீங்கள் யாரும் வராதீர்கள்; நான் அவ ளைச் சரி செய்கிறேன்!... [வேதாளம் உள்ளே பார்த்து] போகிறான். முத்தாயியைப் வேதா : முட்டாள் பெண்ணே! எழுந்திரு! ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?... பேசமாட்டாயா?... ம்... துக் கப்பட இது தான் நேரம் போலிருக்கிறது...கடல் குமுறி கொண்டிருக்கிறது...நீ என்னமோ கட்டு மரத்தில் இருந்து ஒப்பாரி பாடிக்கொண்டிருக்கிறாய்!... ஆக வேண்டியதைப் பார், அன்புள்ள சிறுமியே! அழுவதால் ஆபத்தை தடுத்து விட முடியாது.. ஏன் அழுகிறாய்? முத்: ஊர் சிரிக்கிறது; நான் அழுகிறேன் ... வேதா : உண்மை தான். ஆனாலும் கொழுந்து மனம் படைத்த கோதையே! கொந்தளிப்பிலிருந்து மீள்வதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிற தென்பதை உணருவாய்... முத்: மீள்வதற்கு வாய்ப்பா ! வேதா : ஆமாம்... வாய்ப்புத்தான்.. உன் விடுதலை தான்... வேதனை விலகுகிறது என்ற அறிகுறிதான். வேதா ளத்தின் வடிவத்திலே வந்திருக்கிறது... முத் : என்ன சொல்கிறீர்கள்?... வேதா: முத்தனும் நானும் எவ்வளவு நேசமுடன் பழகினோம் என்பது உனக்குத் தெரியாது..நீ கொடுத்த பொன்னை சுமதி வாயில் போட்டுக் கொண்டு விட்டாள்... முத்தன் பாசறைச் சிறையில் அடைக்கப்பட்டு விட்டான்... நான் வெகு நாளாக அரும்பாடுபட்டு சேமித்து வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/73&oldid=1723609" இலிருந்து மீள்விக்கப்பட்டது