76
76 ஆனந்தமான வாசம் எதுவுவே கிடையாது...களிப்பில் ஆடும் மயிலைப்பார்! காதாரப் பண்பாடும் குயிலைப்பார்! ஆறு பார்! - அருவிபார்! அதன் அழகுபார் !-கொஞ்சம் அருகே வந்துபார்! முத்: உம்.. முத்தன் : என்றெல்லாம் சீதையிடம் ராமன் பேசி யிருப்பான்... காட்டு வாழ்க்கை அவர்களுக்கு கசப்பாகவா இருந்திருக்கும்?... லட்சுமணருக்கு வேண்டுமானால் கசப் பாக இருந்திருக்கலாம்.. பாவம், அவர் கல்யாணம் பண்ணி யும் பிரமச்சாரி ! முத்: குறும்பு! முத்தன்: 1 சரி, முத்தாயி வா ! நாம் மாறு வேடத் திலேதான் மறைந்து வாழ வேண்டும்... இல்லாவிட்டால் வேலழகன் எப்படியும் பிடித்து விடுவான் வா... வா!... தளபதி மாளிகை தளபதி: முத்தாயி! பாவாய்!
ஏன் ... க உனக்காக நான்மட்டுமா காத்திருக்கிறேன்?... அதோ, அந்த வானத்துச் சந்திரிகை யும் காத்திருக்கிறது... கோலப் பெண்ணே! குளிர் மொழிப் இன்னும் வராமல் இருக்கிறாய்?... அந்த குதிரை வீரர்கள் மண்டுகளா?...அல்லது இந்தப் புரவிகள் தான் என் அவசரம் புரியாதவைகளா? எவ்வளவு நேரம்... எவ்வளவு நேரம்... அப்போதே சொன்னேன்... ஆனந்த புரத்துக்கும், தலைநகருக்கும் இடையே ஒரு குறுக்குப் பாதை போட வேண்டுமென்று இந்த அசட்டு ராஜா கேட்டிருந்தால் இப்போது எவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என் முத்தாயி!... [வீரர்கள் பெண் வேடம் பூண்ட சுகதேவைக் கொண்டு வருகிறார்கள்] தளபதி: முத்தாயி! வந்துவிட்டாயா?... முத்தாயி, பேசமாட்டாயா?... ஆகா! உனது பொன்பொழி சிந்தும் இதழ் களை யார் மூடியது?... இந்தக் குதிரைக்காரப் பயல்கள் முட்டாள்கள்!