பக்கம்:அம்மையப்பன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வேதா : அடா—அடா—அடா இவ்வளவு பெரிய உண்மையை எங்கேயப்பா நீ கற்றுக் கொண்டாய். நீ படிக்கிற பதினெட்டு சித்தர் சொன்னாரா ? ... குதம்பை சித்தர் சொன்னாரா?

முத்தா ஆரம்பித்து விடாதே உன் அதிமேதாவித் தனமான பிரசங்கத்தை.......

முத்தன் : நான் சாமியாரைச் சொன்னால் தங்களுக்கு ஏன் கோபம் வருகிறது

வேதா : ஏ முத்தா ! இது அஞ்சல் மனை. பலரும் வரும் இடம் போகும் இடம் ... நீ இப்படி உளருவது எனக்கு ஆபத்து... இதுமாதிரி எதுவும் வருமென்று தெரிந்துதான் உனக்கு என் வீட்டில் அந்த அறையை வாடகைக்குத்தர அவ்வளவு தயங்கினேன்...

முத்தன் : சரி——சரி—வாயை மூடிக் கொண்டேன்...

வேதா: போதாது!... வாலையும் சுருட்டிக் கொள்...

முத்தன் : இது என்ன ராமாயணம் ? ராவண தர்பாரா ?........

வேதா : சரி ஏன் நிற்கிறாய் அரண்மனைக்குப் போக வில்லையா குதிரை தேய்க்க...

முத்தன்: ஏன், நான் இங்கிருந்தால் இன்னும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பேன் என்ற பயமா?...

வேதா : இல்லை ஊதியம் வாங்குகிற இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்க வேண்டாமா? அதற்காகச் சொன்னேன்.... நீ நல்ல பிள்ளை எப்படியாவது கெட்டுப்போ. எனக்கு என் கடமை பெரிது, சாமியாரை மட்டும் ஒன்றும் சொல்லாதே. அவர் உன்னைப்போல சத்திரத்துப் பேர்வழி அல்ல; ஜகம்புகழும் மகான்.

முத்தன் : ஜகம் புகழும் மகான் அப்பேர்ப்பட்ட மகான் அடிமையாய் இருக்கும் இந்த பழுதூருக்கு விடுதலை வாங்கித்தர சக்தி பெறவில்லை போலும்.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/8&oldid=1770025" இலிருந்து மீள்விக்கப்பட்டது