பக்கம்:அம்மையப்பன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தான் என்ன - சுகதேவ், முத்தாயி இருவரும் தங்கள் காதல் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு விரைவில் வந்து விடுவார்கள். திரி; எப்போது? நான் சுடுகாட்டுக்குப் போகும் போதா? . ... வேதா : அப்படியானால்தான் என்ன? உனக்கு கொள்ளி வைக்கப் போகிற பேரன் எதிர்கால பாளையக் காரராக அல்லவா இருப்பான்.ஹி ஹி ஹி. திரிசங்கு! அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு மகத்தான திருமண ஏற்பாட்டுக்கு யோசனை சொன்னேனே - எனக்கு எங்கே பரிசு? திரி : பரிசா? வேதா : ஊ தியம் என்று கேட்கட்டுமா? திரி: விளையாடாதீர்,என் வேதனையோடு. வேதா: விளையாட்டா? இந்த வேதாளம் விளையாட் மாட்டான் திரிசங்கு...மரியாதையாக எனக்குத் தரவேண் டிய பரிசு வரவேண்டும். இல்லாவிட்டால்,... நீ திரி: இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? வேதா : என்ன செய்வ? சுகதேவை ஏமாற்றி கெடுத்து விட்டாய் என்று பாளையக்காரரிடம் கூறுவேன். ஜாக்ரதை! திரி: பயறுத்தாதீர். பாளையக்காரர் முட்டாள் அல்ல ஆதாரமில்லாத உன் பொய்யை அப்படியே நம்பிவிட 0 வேதா : ஆதாரமா இல்லை? முத்தாயி உன் வீட்டில் இல்லாததே எனக்கு பெரிய ஆதாரம் தெரியுமா? திரி : போதும்! நிறுத்தும்! நீரும்தான்: யோசனை சொன்னீர். வேதா : அது வராது அப்பனே இந்த வழக்குக்கு! இரு... இரு உன்னைப் பேசிக் கொள்கிறேன். ஒழுங்காக டந்து கொண்டால் பிழைத்தாய். இல்லை.... க திரி : இல்லை -செத்துவிடுவேன். அவ்வளவுதானே! ஒன்றும் மிரட்டாதீர். உம்மால் ஆனதைச் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/81&oldid=1700494" இலிருந்து மீள்விக்கப்பட்டது