81
81 தனவணிகர் வீடு [முத்தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறான். முத் தாயி அதை கதவிடுக்கில் நின்று கவனிக்கிறாள்] முத்தன்: எப்படியும் பழுதூர் விடுதலை பெறவேண் டும். இந்த எண்ணம் மக்கள் உள்ளத்திலே பதிய வேண் டும் .. விடுதலை உணர்ச்சி காட்டுத்தீ போல் பரவிவிடுமானால் பிறகு ஒரே நாளில் பழுதூரில் சுதந்திரக் கொடிபை பறக்க விட்டு வேங்கை நாட்டு ஆதிக்கத்தை விரட்டிவிடலாம்! தோழன் 1: தோழன் 2: இறங்க வேண்டும்.. தோழன் 3: yib... மக்கள் மனதை மாற்றுவதென்றால்... யோசித்தால் நடக்காது . செயலில் ஆமாம்... அது தான் என் அபிப்பிராய முத்: மக்கள் எங்கெங்கே தங்கள் கவனத்தை செலுத்துகிறார்களோ. அத்தகைய எல்லாத் துறைகளிலும் நமது கருத்தைப் பரப்பவேண்டும்... தோழ 2: ஆங்!... அண் அண்ணா சொல்வதுதான் சரி!... முத்: நீங்கள் போங்கள்... மற்றவைகளை நான் வருகிறேன்... (போகிறார்கள். முத்தாயி வருகிறாள்] முத்: முத்தாயி...! முத்தாயி: ஆமாம்; இதெல்லாம் என்ன? முத்
கவனிக்க விடுதலைப் போருக்கு ஆரம்பம்! அவர்கள் என் தோழர்கள்... பழுதூர் விடுதலையடைய இது போல ஒரு படையே சேர்க்கிறேன்.. முத்தாயி: எனக்கு பயமாயிருக்கிறது. முத் : பைத்தியம்! பயமா?... புறநானூறு சிரிக்கப் போகிறது உன்னைப்பார்த்து!... முத்தாயி: விடுதலைப் போர் நடத்தினால் உங்கள் உயிருக்கே ஆபத்து வந்து விட்டால்... முத்: பிறகென்ன - விடுதலை வீரனுக்கு விருந்தா வைப்பார்கள் இத பார்..இந்தக் குழந்தைகூட என்னையே பார்க்கிறது...டேய்!... இதுபோல நமக்கு ஒன்று...