82
82 முத்தாயி: இன்னும் எட்டு, ஒன்பது மாதங்கள் பொறுத்திருங்கள்... Lid... முத் : ஆ...அப்படியா? நீ சொல்லவில்லையே என்னி அடைக்கலபுரி தேவாலயம் [இளந்துறவி சுகதேவ், 'முத்தாயி" ஜபத்துடன் நிஷ்டை இருக்கிறான். அப்போது துறவி வேடத்துடன் வேதாளம் வருகிறான்] வேதாளம் : ஓம் சக்தி! சாமுண்டி, மகாகாளி, பர மேஸ்வரி, ரேணுகாம்பா, சுந்தரி, சவுந்தரி, நிரந்தரி துரந் தரி, ஜோதியாய் நின்ற உமையே!...சுக்ர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய். அம் பிகே! ஜெகதம்பிகே! காளி!... (சுகதேவைப் பார்க்கிறான்) சுக : முத்தாயி...முத்தாயி... வேதா : இளந்துறவியே! வாழ்த்துக்கள்... முதலில் என்னுடைய சுக : வெண்தாடிப் பெரியவரே!.. உலகம் பொய்! உமக்கென்ன வேண்டும்?... வேதா : பொய்யான பொய்யான இந்த உலகத்தில் மெய்யான இளைஞரே!...உமக்கு எவ்வூர்?... உம்மைப் பார்த்தால் ஏதோ உள்ளங் கவர்ந்த ஒரு பொருளை பறி கொடுத்தவர்போல் தெரிகிறதே! சுக : ஆஹா.. ஹா... ஹா! அதிசயமனிதர் நீர்! அகத் தில் உள்ளதை எப்படிக்கண்டீர்? எவ்வாறு விண்டீர்? விண்டீர்? திரி கால முணரும் தேவாமிர்தமா உண்டீர்?... வேதா : தம்பி !... காதலில் தோற்றவன் நீ என்பது என் ஞானக் கண்ணிலே தெரிகிறது... மெய் தானா? சுக : ஆமாம்! எப்படித் தெரியும் உமக்கு?... வே : உத்தமர்களுக்கு உலகின் ஒவ்வொரு கோடி யும் தெரியும்... நீர் ஓர் அரண்மனைவாசி ! ஆரணங்கின் மயக்கத்தால் ஆசிரமத்துவாசியாகி விட்டீர்! இல்லையா?...