பக்கம்:அம்மையப்பன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 மழை பொழிகிறது. குழந்தையுடன் ஓடி வரு கிறாள்!...ஆடிக்கொண்டிருந்த மரம் ஒன்று முறி கிறது. முறிந்த மரத்தடியில் முத்தாயி சிக்கி விடு கிறாள். குழந்தை தனியாக பிரிந்து விடுகிறது] மண்டபம் [புயல் ஓய்கிறது. வேதாளமும், சுகதேவும் ஒரு மண்டபத் தில் உட்கார்ந்திருக்கின்றனர்] வேதாளம்: பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு பிடித்துன்னை... கண்ணால் மயக்கி (வணிகர் வருகிறார்) வணிகர் : அய்ய.... அய்யா! ஒரு பெண்ணையும் குழந் தையையும் பார்த்தீர்களா அய்யா?... சுக : என்ன! பெண்ணும் குழந்தையுமா?...கடற் கரையிலே எத்தனையோ எத்தனையோ ஆணும் எத்தனையோ பெண் D... வணி: இல்லை அய்யா! வழக்கம்போல என் குழந் தையைத் தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு வந்தாள் வேலைக் காரி... வேதா : போ... போ... போய்த் தேடு! (வணிகர் போகிறார்) சுக : நாஙக தேடறதே கெடக்கிலேயாம். வேற... வாங்க சாமி போகலாம். ஊரின் வெளிப்புறம் இவன் [தனவணிகர் குழந்தையைத் தேடிக் கொண்டு வருகிறார். ஒரு மரத்தடியில் நின்று அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கிக் கொள்கிறார்] தன : கடவுளே!.. என்னைக் காப்பாற்றினாய். இந்த ஏழையைக் காப்பாற்றினாய்... அதே சமயம் [முத்தாயி மரத்தின் அடியில் மயங்கிக் கிடக்கிறாள்..அவ் வழியே சுமதி வருகிறாள்... முத்தாயியைக் காண் கிறாள்]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/86&oldid=1723623" இலிருந்து மீள்விக்கப்பட்டது