85
85 சுமதி : யாரது?...அய்யோ பாவம்! (பார்க்கிறாள்) ஆ!...முத்தாயி...முத்தாயி.. [அவளை அணைத்து நடத்திக் கொண்டு செல்கிறாள்] தனவணிகர் வீடு முத்தன் : பொன்னி எங்கே? தனவணிகர் : நான் போகவில்லையென்றால் குழந்தை அவ்வளவுதான். காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து... முத்: பொன்னி எங் எங்கே? தன : அடடே! நான் அவசரத்தில் அவளை மறந்தே விட்டேன்! முத் : மறந்து விட்டீர்கள்! எங்களைப் போன்ற ஏழை களை மட்டுமல்ல; உங்கள் சீமான் இனம், இரக்க மெனும் ஒரு பண்பையே மறந்து பலநாளாயிற்று. [முத்தன் ஓடுகிறான்) சுமதி வீடு [முத்தாயி, சுமதியுடன் அவள் வீட்டில் வேதாளமும் நுழைகிறாள். அதைப் பார்க்கிறார்கள்.] சுகதேவும் சுக : இந்த வீட்டுக்குள் போகிறார்கள்... சாமி, நாமும் போகலாமா?... வே : சுக : வே : பொறு அப்பனே! பொறுக்குகிறேன்... வா... வா... நம் இடத்துக்குப் போவோம்... முத்தாயி இருக்குமிடம் தெரிந்து விட்டது. இனி அவள் யாரைச் சேரவேண்டுமோ அவனிடம் அவளை சேர்க்க வேண்டியது என்கடமை... சுக : கடமையை விரைவில் நிறைவேற்றுங்கள் ஸ்வாமி! வே: அப்படியே ஆகட்டும்.. சரி.. சரி...வா... வீட்டிற்குள் முத்தாயி: அன்று உன்னைப் புரிந்து கொள்ளாமல் கோபமாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு... சும : அதையெல்லாம் மறந்துவிடுவோம்!