பக்கம்:அம்மையப்பன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 முத் : கல்யாணமானதும் உன்னுடைய குறும்புப் பேச்செல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டதே... சும : எங்கும் ஒளியவில்லை...அவர் உடல் நலம் பெறட்டும்... பிறகு கேளேன், என் பேச்சை! முத்தாயி, நீ என் பேச்சை குறும்பு என்கிறாய்; அவர் என்ன தெரியுமா சொல்லுகிறார்?.. கரும்பு என்கிறார்! பேசிக் முத்: உம், சரி சரி... உன்னுடையவரைப் பற்றியே கொண்டிருக்காதே... கொஞ்சம் என்னுடைய வரையும் கவனி... வேதாளத்தின் ஆசிரமம் [சுகதேவ் கதவைத் தட்டுகிறான். உள்ளே. வேதாளம் தளபதியுடன் பேசிக் கொண்டி ருக்கிறான்] சுக : ஸ்வாமி! ஸ்வாமி! வே: பொறு. இன்னும் நிஷ்டை முடியவில்லை. சுக : சுகதேவ் வந்திருக்கிறேன் சுவாமி! கதவைத் திறவுங்கள். வே: மூடபக்தா! இரு. கடவுளுடன் பேசிக் கொண் டிருக்கிறேன், முத்தாயி விஷயம் பற்றி... சுக : (தனக்குள்) ஆகா! கடவுளோடு பேசுகிறாரா? நாம் தான் பகவானைப் பார்க்க முடியாது. பாப ஆத்மா! சாமியார் பேசும்போதாவது மறைவாக பாதாவது மறைவாக இருந்து பார்த்து விடுவோமே! [ஜன்னல் கதவைத் திறந்து பார்க்கிறான். அனுக்கு தூக்கி வாரிப் போடுகிறது] சுக: ஆ! அய்பய்யோ! தளபதி!... வேதாளம் மறுபடி யும் முருங்க மரம் ஏறுகிறது.எங்கப்பா ! நல்ல வேளை, நான் பிழைத்தேன்...(ஓடுகிறான்.) சத்திரத்திற்குள் வே: ஓடிப்போன முத்தன்கூட ஒரு விடுதலைப் பட்டா களத்தைச் சேர்த்துக் கொண்டு பழுதூரை விடுவிப் பதற்காக சதி செய்கிறான் என்று தெரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அந்தப் பயில் முத்தனையும் பிடித்துவிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/88&oldid=1723625" இலிருந்து மீள்விக்கப்பட்டது