பக்கம்:அம்மையப்பன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 றெல்லாம் கேட்பதற்கு நேரமில்லை இப்போது... என் ஆரு யிர் காதலி முத்தாயியை ஆண்டிவேடம் போட்ட வேதா ளம் எங்கேயோ ஏமாற்றி அழைத்துப் போகிறான். முத்: ஆ! எங்கே? சுக : அவனுடைய ருப்பான்... சத்திரத்திற்குத்தான் போயி சத்திரம் [உள்ளே போர்வையால் ஒரு உருவம் மூடப்பட்டி ருக்கிறது...வேதாளம் முத்தாயியுடன் வருகிறான்] வேத: அதோ ...உன் காதலன்! [ஆவலுடன் 'அத்தான்' 'அத்தான்' என்று போர்வையை இழுக்கிறாள் வேலழகன். எழுகிறான்.) முத்: .....!... வேலழகன் : முத்தாயி!... முழு நிலவே!...ஏன் பயப் படுகிறாய்?...அத்தான் என்று அழைத்தாயே, அந்த அனாதை முத்தனல்ல; தளபதி வேலழகன்! தெரிகிறதா என்னை?... முத்: தளபதி வேலழகன்! நாடுகாக்க வேண்டிய நீங்கள் இப்படி நடுத்தெரு நாடோடியாகி விட்டீர்கள்... வேண்டாம். நான் உங்கள் சகோதரி... வேல : மலரும் வண்டும் சகோதரர்கள் என்றால் மடையர்கள் தான் நம்புவார்கள் கண்ணே!... (கையைப் பிடிக்கிறான்) முத் : சீ!...விடு என்னை! வெட்கங் கெட்டவனே!... விஷப்புயலே! உன் காமச் சூறாவளியிலே கவிழ்ந்து விடும் மரமல்ல நான்... வேல: திட்டு நன்றாகத் திட்டு! எழுத்துக்கு எழுத்து தித்திக்கிறது...கூண்டிலே அடைபட்ட கிளி கத்துவது கோபத்தால் அல்ல!... பயத்தால்! அதுவும் பழ கப் பழக சரியாகி விடும். முத்: நெருங்காதே!... வேல : இந்த நாட்டின் சேனைத் தலைவன் அழைக் கிறேன்... என் ஆணைக்கு அடங்காதவர்கள் என்ன ஆவார் கள் தெரியுமா?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/90&oldid=1723627" இலிருந்து மீள்விக்கப்பட்டது