பக்கம்:அம்மையப்பன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 முத்: கொன்று விடுவாய்! அவ்வளவுதானே?... சாவுக்குப் பயப்படமாட்டேன்! சாவு உன்னை விடக் கோரமானதா? இல்லை... இல்லை... ஒருக்காலுமில்லை! வேல: முத்தாயி!-இரும்பு போன்ற என் கரங் களிலேயிருந்து தப்பிய மலர்கள் எதுவுவே கிடையாது!... ஞாபகம் வைத்துக் கொள்!... முத் : என்னை விட்டுவிடு, அக்ரமக்காரா!... வேல : அக்ரமம் என்ற அச்சாணியில்தான் அகில உலகமும் சுற்றுகிறது!... முத்தாயி!...இனி நீ தப்பவே முடியாது...இணங்கி விடு நீயாகவே!... (நெருங்குகிறான்- முத்தாயி ஓட முயலுகிறாள்) எங்கே ஓடுகிறாய்? நீ எங்கு சென்றாலும் நான் விடமாட்டேன்.. வானம்பாடியாக நீ பறந்தால், உன்னை வட்டமிடும் பருந்தாக மாறுவேன்!... புள்ளிமானாக மாறித் துள்ளினால், புலியாகச் சீறிடுவேன்! நீ கடைசியில் பிணமானால்கூட உன் சரீரத்தைத் தொட் டெரிக்கும் சந்தனக் கட்டையாக மாறுவேன் நான்! இன் பமே!... இணங்கிவிடு... வசந்தத்தில் புஷ்பிக்கும் வாசப் புது மலரே! வந்துவிடு என்னிடம். வண்ணத் தாமரையே! வர்ணஜாலப் பூங்கொத்தே!...என் வலிமை மிக்க தோள் களிலே உன்னை வாரி எடுத்துக் கொள்வேன்... பாய்ந்து விடு என்மேல், பைங்கிளியே!... முத் : வீணாக அழிந்து போகாதே; விலகி நில். வேல : (பயங்கரச் சிரிப்பு) என்னை அழித்துவிட்டு உனக்கு யாரும் இட்போது அபயம் கொடுக்க முன்வரப் போவதில்லை!... கதைகளில் படித்திருப்பாய்; காதலிக்கு இன்னல் வரும்... கதாநாயகன் ஓடிவந்து காப்பாற்று வான் என்று! அதெல்லாம் நடக்காதம்மா இங்கே!... அப்பேற்பட்ட சீதையையே அசோகவனத்திலிருந்து சாமான்யமாக மீட்க முடியவில்லை, அவதார புருஷர் ராமச் சந்திரமூர்த்தியால்! ஞாபகத்தில் வைத்துக்கொள்! பரிதா பத்துக்குரிய பெண்ணே!... உனக்கு யாரோ பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், கண்ணகி போல கற் போடு நடக்கவேண்டும் என்று!... அதெல்லாம் சிலப்பதி காரத்துக் காலம்... தடை விதிக்கப்படவேண்டிய இலக் கியம்... இந்தப் படைத் தளபதி அனுமதிக்க முடியாத த்த்துவம்...ஆரணங்கே! வந்துவிடு அருகே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/91&oldid=1723628" இலிருந்து மீள்விக்கப்பட்டது