பக்கம்:அம்மையப்பன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 முத்: வேலும் வாளும் தாங்கி போரிடும் வீரத் தலை வனே! ஒரு பெண்ணிடத்தில் இப்படிக் கோழைத்தன மாக நடந்து கொள்ளாதே... வேல : வீரத்தனமாக நடந்து கொள்ளட்டுமா?... முத்: விட்டுவிடு என்னை... வேல : கையிலே கிடைத்த கனி-கண்ணில் அகப் பட்ட பறவை-கபோதிகள் கூட விடமாட்டார்கள்! முத் தாயி! எச்சரிக்கிறேன்; பொறுமையை சோதிக்காதே (அணைக்க நெருக்குகிறான்) முத்: சீ! (அறைகிறாள்) வேல : ஆ!... (வாளை உருவுகிறான். முத்தன் மேலேயிருந்து குதிக்கிறான்.) வேல: முத்தா!... வீணே சாகாதே! நீ யார் என் பதை நிதானித்துக் கொள்.. முத்தன் : நானா? நான்தான் உன் தான்தோன்றித் தனத்தின் தர்பாரிலே-சர்வாதிகாரச் சபா மண்டபத்திலே சிக்கிச் சீரழிந்த வீரன்!...ஆனால் இன்று அந்த வீரனாக வரவில்லை...நான் சிந்திய ரத்தத்திற்கு-நான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு-உனக்குப் பரிசளிக்க வந்திருக் கிறேனடா, பரிசளிக்க வந்திருக்கிறேன்! பெண்வேட்டை யாடும் பித்தனே! மதுவும் மங்கையர் சுகமும் உங்கள் மகு டத்தின் நிழலிலே மறைந்து கிடக்கலாம்... ஆனால், அந்த மகுடத்தை தூள் தூளாக்கிப் போடும் புரட்சி சக்தி பொங்கி எழுந்துவிடும் என்பதை உணரமுடியாத மதோன்மத்தர்கள் நீங்கள்... வேல் : யாரோடு பேசுகிறாய் என்பதை மறந்து விடாதே முத்தா! முத்: என் வாழ்க்கையோடு விளையாடுகிற உன் னோடு விளையாடுகிறேன்! வேல : என் சுட்டுவிரல் அசைந்தால் நீ சுக்கு நூறா கப் போய்விடுவாய்... முத்: ஆஹாஹா!...உன் சுட்டுவிரல் என்ன தியலா?- இல்லை, நான் தான் என்ன சுத் கண்ணாடிப் பாத்திரமா சுக்குநூறாகிவிட...பயமுறுத்திவாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/92&oldid=1723629" இலிருந்து மீள்விக்கப்பட்டது