91
ம 91 காலம் மலையேறி விட்டது படைத்தலைவரே! இனி பண்புடையோர் மட்டுமே வாழ்வதற்கு இடமளிக்கும் பகுத்தறிவுக் காலம் வந்து கொண்டிருக்கிறது என் பதை நீர் நினைவில் வைத்துக் கொள்ளும்... உம்மைப் சர்வாதிகார அடிச்சுவட்டை பின்பற்றி வேக மாகச் சென்றவர்களின் ஆட்சி பீடம் ஓடாகி, மேடாகி, இருந்த இடம் தெரியாமல் சுடுகாடாகிப் போய் விட்டது! போல வேல ; கையிலே இருப்பது என்ன தெரிகிறதா?... முத்தன்: நன்றாகத் தெரிகிறது ... கோழையிடத் திலே இருக்கிற கத்தியின் பளபளப்பு, வீரனுடைய கரத் தின் சொர சொரப்புக்கு முன்னே எம்மாத்திரம்? உன் னிடம் கத்தி!..இதோ என்னுடைய போர்க்கருவி! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பாசறையிலே தயாரான போர்க்கருவி ! கயவர்களை-கத்திவீச்சுக்களை- கண்யமற்ற செயல்களை - எதிர்த்து நிற்கும் போர்க் கருவி!... ... - வேல: அவ்வளவு பெரிய வீரனா? கத்தியைக் கையால் எதிர்க்கும் சூரனா?... இதோ பார்ப்போம் அதை யும்... (இருவருக்கும் பயங்கரமான போர். குறும்பன் வருகி றான். நிலைமையைக்கண்டு ஓடுகிறான். போரின் முடிவு? படைத்தளபதியின் மரணம்!] முத்தாயி: அத்தான்!... முத்: முத்தாயி !... (குறும்பன் வீரர்களுடன் வருகிறான்) குறும்: ஆ!... தளபதி!... அய்யோ, இறந்துட்டீங் களா ? டேய், இவரைத் தூக்கிட்டு போங்கடா. டேய் முத்தா! நீதானே இவரைக் கொலை செய்தது?... டேய், இவனையும் கைது செய்யுங்கள். [வீரர்களுக்கும் முத்தனுக்கும் சண்டை-முடிவில் முத்தன் பிடிபடு கிறான்...முத்தாயி கதறி மூர்ச்சையாகிறாள்.] வெளியே (தளபதியின் பிணத்தை தூக்கிக்கொண்டு போகிறார். கள். சுகதேவ். அதைப் பார்க்கிறான்.) சுக: ஆ!...