93
93 கக: உம்... நான் ஏன் அதெல்லாம் படிக்கிறேன்... முத்தாயி, இப்போது நீ என்னைத் திருமணம் செய்து கொண்டுதான் தீரவேண்டும்... கண்ணே முத்தாயி!...
முத்: உம்... நான் தயாராக இருக்கிறேன்... இந்த சரீரம்தானே உனக்கு வேண்டும்? என்மேனியின் மெருகிலேதானே நீ மயங்கிவிட்டாய்? .... உம்... அடிமையாக்கிக் கொள் என்னை ! யாரோ சொன்னா ளாமே உடல்தான் அழுக்குப்பட்டது; உள்ளம் அழுக்குப் படவில்லை என்று! அப்படியல்ல நான்...என் கற்பை உன் காலடியில் வைக்கத் தயாராகி விட்டேன்... காமவெறி யில் பாய்ந்துவரும் கழுகே! உன் கொடிய நகங்களால் என் இருதயத்தைப் பிராண்டி விடு! உம் தாமதிக்காதே! சூறையாடு என் வாழ்க்கையை!...சிக்கு நூறாக்கிவிடு என் வைராக்கியத்தை! பெண்களை விபசாரப் பதுமைகளாக நினைத்துவிட்ட பேயர்களின் பிரதிநிதியே!...ஏன் தயக்கம்? இதோ நான் தயார்! என்பிணம் பேசுகிறது உன்னோடு! என் சவம் அழைக்கிறது உன்னை! வா..வா...வஞ்சகனே! இதோ நான் முத்தாயி --முத்தனின் மனைவி--உனக்கு வெள்ளாட்டி! ... சுக : என்ன? நீ முத்தனின் மனைவியா?... முத்தாயி, என்னை மன்னித்துவிடு!...உன் தகப்பனார் பேச்சைக்கேட்டு இப்படி எல்லாம் கெட்டுவிட்டேன்! இல்லறத்தை நம்பி துறவறத்தின் எல்லை வரையில் போய்விட்டேன்! முத்தாயி! உன் மேல் வைத்த காதலை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அன்புள்ள சகோதரி! இப்போதே போய் உன் காதலனைக் காப்பாற்றுகிறேன். பாழ் மண்டபம் [1000 பொன்களுடன் வேதாளம் ஒரு பாழ் மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறான்) கட வேதா: ஆயிரம் பொன் கிடைத்தது எனக்கு ! வுளே! உனக்கு ஆயிரம் நமஸ்காரம்.. என்னை எப்படி யாவது பழுதூர் பாளையக்காரனாக ஆக்கிவிடு... உனக்குக் கோடி நமஸ்காரம்! முத்தாயியை அழைத்து வந்ததற்காக எனக்கு ஆயிரம்,பொன்... இனிமேல் நமக்கு இந்த வேஷம் வேண்டாம்... நாமார்க்கும் குடியல்லோம்: நமனையஞ்சோம்!