95
சுக : என்னைக் 95 கொஞ்சுவதற்கு நேரமில்லை... அப்பா ... காரியம் ழிஞ்சிவிட்டது... பல : என்ன சொல்கிறாய்? சுக : நீங்கள் வந்தால் தான் ஒரு உயிரைக் காப் பாற்றமுடியும்! பல : என்ன சுகதேவ்?' சுக : தூக்கு மேடைக்கு போய்க் கொண்டிருக் கிறான் ஒரு ஏழை! அவனைக் காப்பாற்றுங்கள்...அவனை திரி நாட்டு உளவாளி என்று சொல்லி கொலைக் குற்றம் சுமத்தி தண்டித்து விட்டார்கள். அப்பா உடனே புறப் படுங்கள், வேங்கை புரத்து அரசனிடம்!... பல : விஷயத்தை விவரமாகச் சொல்... த சுக : முத்தனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்!... (பூங்காவனம் "முத்தா" என்று அலறி வீழ்கிறாள்] சுக : அத்தை! பல : பூங்காவனம்!...யாரங்கே? உடனே போய் வத்தியர் பூபதியை அழைத்து வாருங்கள!... (வைத்தியர் பூபதி வருகிறார்-பூங்காவனத்தை பரிசோ தித்து மருந்து தருகிறார். பூபதி: பயப்படாதீர்கள் மன அதிர்ச்சிதான்... வேறென்றுமில்லை! பிரபூ, ஏன் இப்படி திடீரென்று மயக் கம் வந்தது?...ஏதாவது சோகச் செய்தி?... மாளிகையில் பல : அப்படி ஒன்றுமில்லை... நமது குதிரைக்காரனாக இருந்தானே காவேரியின் மகன் முத் தன், அந்த முத்தனுக்கு தூக்குத் தண்டனையாம்! அதைக் கேள்விப்பட்டவுடன் .... [பூங்காவனம் மறுபடியும் "முத்தா' என அலறுகிறாள்... பூபதியின் மூளை வேகமாக வேலை செய்கிறது.] பூபதி : பிரபூ! இந்த மாளிகைக்குப் பின்புறமாக படிக்கட்டுகள் இருக்கின்றதல்லவா?...