96
96 பல : இருக்கிறது. . (பூபதி அறையைச் சுற்றி நன்றாகக் கண்ணைச் செலுத்துகிறார். காதல் புறாக்கள்-கன்றை நாடும் பசு-மான்தோல் வேங்கை மூன்று ஓவியங்களைபும் உற்றுப் பார்க்கிறார்) பூப : தயவு செய்து செய்து என்னை அந்தப் பின்புறத்து படிக்கட்டுகளின் பக்கம் அழைத்துப் போங்கள்! D (போகிறார்கள். பூபதி படிகளை எண்ணுகிறார்) சுக : அத்தை... அத்தை கவலைப்படாதே அத்தை! அடடா... அங்கே முத்தாயி வேற முத்தனுக்கா காக கவலைப் பட்டுக்கிட்டு இருப்பா... ஆகா!...நான் என்னைா வேகமா வந்தேன்... என் வேகத்தையே இந்த வைத்தியர் கொரச் சிட்டாரே...ம்...படி எண்ணப்: போயிட்டாரு 'படி!... அட வாஙகயயா பல : என்ன பூபதி: படிகளை ஏன் எண்ணினீர்?... பூப : எண்ணினேன் அதோடு பழைய நிகழ்ச்சி ஒன்றையும் எண்ணினேன்... படிகளை - ஆகாகா! நன்றாக ஞாபகம் இருக்கிறது - இப் போது நடப்பதுபோல் இதோ, எல்லாம் என் கண்முன்னே அப்படியே காட்சியாகின்றன! அந்தக்காட்சியை அப்படியே சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்... இந்த மாய்கைநாத சாமியார் ஒருநாள் இரவு அவசர மாக ஓடிவந்து என்னைக் கூப்பிட்டார். ரகரியம் ஒன்று - அதை மறைத்துவிட வேண்டுமென்றார். வந்தேன். கண்களை வழியிலேயே கட்டிவிட்டார். மறுத்தேன். பொன்மூட்டை யொன்று வழங்கினார். ஒத்துக் ஒத்துக் கொண்டேன். என்னை எங்கே அழைத்துக் கொண்டு போகிறார் என்றே எனக்குத் தெரியவில்லை. கண்கள் கட்டப்பட்டே இருந்தன. ஏதோ படிகளில் ஏறி என்னை அழைத்துச் செல்வது தெரிந்தது... படிகளைக் கவனமாக எண்ணிக் கொண்டேன். முப்பத்தாறு படிகள்! நன்றாக ஞாபக மிருக்கிறது. ஒரு இருண்ட அறையில் மங்கலான வெளிச்சத்திற் கிடையே என் கண்கள் அவுழ்த்து விடப்பட்டன. எந்த டமென்று