பக்கம்:அம்மையப்பன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97 தெரிந்து கொள்ள... சுற்று முற்றும் பார்த்தேன்... இதோ, இந்த மூன்று ஓவியங்களும் அப்போதும் இருந் தன !...கட்டிலிலே ஒருபெண் படுத்திருந்தாள்...அவள் முகம் கருப்புத் துணியால் நன்றாக மூடப்பட்டிருந்தது... பிரசவ வேதனையால் அந்தப்பெண் துடித்துக் கொண்டிருந் தாள்.இன்னும்.. சிறிது நேரத்தில் இறந்து விடுவாள் போல் தோன்றியது... பிறகு நான் மருத்துவம் செய்தேன் ... ஆஹா !...ஆஹா... !அழகான - குழந்தை குழந்தையை உடனே சாமியார் காவேரி என்பவளிடம் கொடுத்துவிட்டார். காவேரி குழந்தையுடன் ஒடி விட்டாள். மீண்டும் என் கண் கள் கட்டப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டேன். மறு நாளே என் வெளி நாட்டுப் பயணமும் ஆரம்பமாகி விட்டது. அதனால் அந்தப் பரம ரகசியம் பாதாளத்தில் புதைந்து கிடந்தது. திரும்பி வந்ததிலிருந்து சாமியாரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன்; சொல்லவில்லை. ஆனால் இப்போது புரிகிறது, அந்தக் குழந்தை பிறந்த இடம் இந்த அறைதான் என்பது! ஆம்... இன்று தூக்கு மேடையிலே நிற்கும் முத்தனுக்கு, தொட்டில் கட்டியிருக்க வேண்டிய இடம் இது தான்! ஆனால் ஒன்று பிரபுவே! இந்தச் சாமி யார் அவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டாரே, அது ஏன் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை... தான்! தான்! (பூங்காவனம் எழுகிறாள்) பூங் : நான் சொல்லுகிறேன்! முத்தனின் தாய் நான் பல : ஆ! பூங் : என்னை ஏமாற்றியவன் இதோ, இந்தக் காதகன் பல : OT GOT GOT!...... பூங் :அண்ணா! என்னைமன்னித்து விடுங்கள்! நீங்களும் அண்ணியும் வடக்கே சென்றிருக்கும்போது, இவன் வலை யில் நான் வீழ்ந்து விட்டேன்! பக்தி போதனை செய்வதாக இந்தப் : பாலசந்நியாசி அடிக்கடி வந்தான் ஒரு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/99&oldid=1723636" இலிருந்து மீள்விக்கப்பட்டது