பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அம்மையும் அப்பனும் என்றும் பல ஆண்டுகளுக்கு முன் திரு. டாக்டர். A. L. முதலியார் அவர்கள் எனக்குக் கூறியுள்ளார்கள். ஆன்மா இந்த வகையில் பல்வேறு பிறவிகள் எடுத்து, தான்செய்யும் வினைகளுக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் பின் தெளி வுற்ற நிலையில் இறை உணர்வு பெற்று, இறைவனோடு நீக்கமற நிலைபெறும் உயர் பதவியினைப் பெறும் என்பர் சமயத் தலைவர்கள். இந்த மெய்ஞ்ஞான விளக்கத்தினை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். பல்வேறு உலக, அண்ட கோள நிகழ்ச்சிகளையும் மாற்றங் களையும் ஆய்ந்து அறிந்து உணர்த்திய பேரறிஞர்பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இந்த மாற்ற நிகழ்ச்சி களைப் பற்றிக் கூறும் போது இவை எப்படி நிகழ் கின்றன என்று என்னால் கூறமுடிகின்றது; ஆனால் ஏன் நிகழ்கின்றன என்று கூறமுடியாது' என்கின்றார். ஆம்! அந்த விஞ்ஞான உச்சியிலேதான் மெய்ஞ்ஞானம் பிறக்கிறது. இது பற்றிச் சற்று விரிவாக அடுத்த நாள் 'அண்டச் சுழற்சியில் காணலாம். முதலில் நீரில் உயிர் தோற்றம் உண்டாயிற்று; பின் நிலத்திலும் நீரிலும் கலந்து வாழும் ஆமை போன்றவை தோன்றின; பின் விலங்குகள், பின் விலங்கொடு கலந்த மனிதன்-முதலில் வஞ்சகன்-பழிகாரன்-பின் தெளிந்த மனிதன்; அடுத்த சுழற்சி கீழாகிறது. ஆக்கத்திற்குப் பயன் பட வேண்டியதை அழிவுக்குப் பயன் படுத்தும் இன்றை வாழ்வு-எப்படியும் உலகை-கொடிய உலகை மாற்றி மாய்க்கக் கங்கணம் கட்டும் இயற்கைக்கு மாறுபட்ட இன்றைய் செயல்-அடுத்து வரப்போவது முற்றிய அழிவு. ஆம். இந்த வளர்ச்சியைத்தான் நம் தசாவதாரம் காட்டு கின்றது என மேலே காட்டினேன் இத்தகைய உயிர் வளர்ச்சியின் உச்சியிலே மனிதன் வாழ்கின்றான். ஓரறிவுடைய புல் தொடங்கி ஐயறி வுடைய விலங்கு பறவை என்பனவ ற்றையெல்லாம்