பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 99. கடந்து, நல்லதன் நலனும், தீயதன் தீமையும் கண்டு தெளிந்து சமுதாயமாக வாழும் மனிதனாக நிற்கின்றான். ஆம்! அவனே வையம் வாழ வழிகாட்ட வேண்டியவன்காட்டுகிறானா? 'மனிதனே ஆன்ம வளர்ச்சியிலே-உயிர்த் தோற்ற நிலையிலே உச்சியில் உள்ளவன். ஆயினும் மனிதனிலும் கல் உண்டு-விலங்குண்டு-பறவை உண்டு. நெட்டுயிர்ப் போடு உற்ற பிணம்' என்று அவனை அறிஞர் ஏசுவர். 'மரமனையர் மக்கட் பண்பு இல்லாதவர்' என்பர் வள்ளுவர். ஆம்! மனிதன் வெறும் புறத் தோற்றத்தால் மட்டும் அமைபவனல்லன்; மனிதப் பண்பு உடையவனே மனிதன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் T.K.S. பிரதர்ஸ்' என அழைக்கப் பெற்ற T. K. சண்முகம் குழுவினர் மனி தன்' என்றே ஒரு நாடகத்தினை நன்கு நடித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். 'மனிதன்' என்ற சொல்லுக்கு அவர்கள் கண்ட விளக்கம் சிறந்தது. மதமிலான், மானியான், உத்தமன், மன்னிப் பான்’ என்ற நான்கு சொற்களில் முதல் எழுத்து, இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து, இறுதி எழுத்து ஆகிய நான்கும் சேர்ந்ததே மனிதன்' என்று விளக்கம் தந்து, நாடகத்தினையும் அதற்கு ஏற்ற வகையில் அமைத் தனர். ஆம்! மனிதன் யான், எனது' என்ற செருக்கு இல்லாதவனாகவும் மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்' ஒத்து மானம் உடையவனாகவும் உத்தமப் பண்புகள் உடையவனாகவும் பிறர் இழைக்கும் கொடுமைகள்ை மன்னித்து, நொநொந்து அறனல்ல செய்யாதவனாகவும் விளங்க வேண்டும். அங்கேதான் மனிதம் ஒளிவிடும். நீங்கள் இன்றைய மனிதனிடம் இப்பண்புகளைத் தேடி னால் ஏமாந்துதான் போவீர்கள். அதனால்தான் நாட்டி லும் உலகிலும் பல கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.