பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அம்மையும் அப்பனும் "மனிதன்' தேவரினும் மேம்பட்டவன். தேவர் அனையர் கயவர்' என்பர் வள்ளுவர். அவரும் தாம் மேவன செய்தொழுகலான்' என்று காரணமும் காட்டுவர். எனவேதான் ஆழ்வார், இறைவனைப் பாடி அந்த இந்திரலோக வாழ்வு வேண்டாம் என்கிறார். 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே' என்கிறார். விரைவிடை இவரும் நினைப் பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெறுகுறு தமிழ்ச்சொல் மலர்நினக் கணியும் பிறவியே வேண்டுவன் தமியேன்” என சோணசைல மாலை ஆசிரியர் வேண்டுகிறார். எனவே மனிதப் பிறவியே உலக வாழ்வில் மட்டுமன்றித் தேவ்லோக வாழ்விலும் சிறந்தது என்பது தெளிவு. 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்பர் அப்பர். உயர்திணை, அஃறிணையைப் பிரித்துக் காட்ட நினைத்த இலக்கண நூலார் -பவணந்தி, "மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை' என்று உயர்திணையில் மக்களையே முதலில் கூறுகின்றார். இதற்கு உரை கூற வந்த சிவஞான முனிவர் மக்களாய்ப் பிறந்து புண்ணிய மிகுதியால் தேவராகவும் பாவ மிகுதி