பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அம்மையும் அப்பனும் ஆகமானது கொண்டன்றி ஆதலால் - - ஞாலத்து எய்தி யோகமாம் நெறியில் நின்றோர் உண்மை - சாதித்துக் கொள்வர்' என்று இந்த மனிதப் பிறவியினை இறைவன் வாயிலாகவே விளக்குகின்றார். இம்மனிதப் பிறவியிலும், செம்மையும் தூய்மையும் வாய்மையும் சான்றாண்மையும் பெற்றால்தான் இறை வனை அடைய முடியும் என்பதனையும் சிவப்பிரகாசர் விளக்கத் தவறவில்லை 'நன்னெறி எழுதி நாட்டுக்கு வழி காட்டியவர் அல்லவா அவர். ஆம்! அப்பன் கூறியதைக் கேட்ட அம்மை தன் அருகில் உள்ள தமோ குண மாயையை அழைத்து, நீ உலகில் பிறந்து இறைவனின் கூறுஆகிய அல்லமனைப் பற்றி வருக என ஆணையிடு கின்றாள். ஆனால் அவளால் அது முடியாது என்பதைச் சிவப்பிரகாசர் ஒர் உவமையால் விளக்குகிறார். மாயை "வல்லிதின் பற்றி ஈர்த்து வருகுவன்' என்று சபதம் செய் கிறாள். அது வேலை கவற உண்டிடுவல் என்று புல்லிய எறும்பு ஒன்று ஆற்றல் புகல்வது போலுமன்றே என் கின்றார். ஆம்! ஒரு சிற்றெறும்பு கடல் நீர் முழுவதையும் க்டலே வற்றுமாறு உண்பேன் என்று சபதம் செய்வது போல இருந்தது மாயையின் சபதம். இதனால் தமோ குண மாயையால் இறைவனைப் பற்ற முடியாது என முதலிலேயே விளக்கி விட்டார். பின் அவள் பிறந்து தவழ்ந்து தளர் நடையிட்டு வளரும் போதும் மற்றொரு உவமையால் விளக்குகிறார். நாம் நம் நிழலைப் பார்க்கிறோம். ஆனால் அதனை நம்மால் பற்ற முடியாது அல்லவா! அதே நிலையில் தான் மாயையும் இருந்தாள்.