பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 103 பரவு பெருஞ்சீர் அல்லமனைப் பற்றவந்த - மதியால்தன் உருவ நிழலைப் பற்ற நினைத்து ஒடி ஒடிக் கலுழ்ந்திடுவாள்' என்கிறார் சிவப்பிரகாசர். ஆம்! அண்மையிலேயே இறை வனாகிய அல்லமன் அவள் முன் தோன்றுகிறான்-நிழல் தோன்றுவது போல. ஆனால் மனித உடம்பு-போக உடம்பு பெற்றும் அவளுடைய ஆணவப் போக்கால் அவனைப் பற்ற முடியாது நிலை குலைந்து தடுமாறு கிறாள். ஆயினும் பின் மனிதப் பண்புடன் மமகை அற்று தீங்கு நீங்கி, செம்மை நலத்தில் பிறந்து, மொழி பயின்று பின்னெல்லாம் இறைவனிடம் காதல் சிறந்து நின்ற அக்கமா தேவியார் அவ்விறைவனைப் பற்றிக் கொள்ளு கிறாள் என்று சிவப்பிரகாசர் உயிர் வாழ வேண்டிய வகையினை-தெளிந்த ஆன் மா வின் தன்ன்மயினை விளக்குகிறார். எனவே வெறும் மனித உடம்புடன் மட்டு மன்றி உணர்வால், உற்ற செயலால் மனிதன் வாழ்வானா யின் அவனே இரு வரையும் பெற்ற ஆன்மா ஆவான். இந்த உண்மையினைத்தான் எல்லாச் சமயங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அதனால் வெறும் மனித உடம். பினை மட்டும் பெற்றால் போதாது, வள்ளுவர் காட்டிய படி எல்லா மனிதப் பண்புகளும் பெற்றால்தான் மனிதன் மனிதனாவான். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்' என்பர். “நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்பது தொல்காப்பியம். எனவே எல்லாம் நிறைந்த உலகம் போற்றும் நல்லவர்களாகவே வாழ்பவர் மனிதர் என்பது தெளியக் கிடக்கின்றது. இத்தகைய மனிதனுக்கு அடிப்படையாக வேண்டுவன நாம் மேலே கண்டபடி அன்பு, அறிவு, பண்பு, அருள் போன்றவையே.