பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக்ர் நிர்வாண் சொற்பொழிவு (1) 4-8-93 அம்மை அடித்தால் பெரியோர்களே! அன்னையரே! வணக்கம். நிர்வாண் சங்கம் நெடுநாட்களாகப் புதன்கிழமை தோறும் பல அறிஞர்களைக் கொண்டு இங்கே பற்பல சிறந்த பொருள்களைப் பற்றிப் பேசவைத்து, உங்களுக்கு நலம் செய்கின்றது. அதிலும் திங்களுக்கு ஒர் அடிப்படைப் பொருளும்-மூலப்பொருளை அமைத்து, அதைப் பல கிளைக ளாக்குவித்து, மாதந்தோறும் வரும் புதன்கிழமை களில் விளக்கமுறச் செய்கின்றது. அந்த மரபின் நெறியின்-வரிசை வகையில் இந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நான்கு புதன்கிழமைகளிலும் பேச நான் உங்கள் முன் நிற்கின்றேன். பொருளோ மிகப் பெரிது. அதன் அணுத்தன்மை அளவினைக்கூட என்னர்ல் எடுத்துக் காட்ட இயலாது என்பதை அறிவேன். 'அம்மையும் அப்பனும் என்ற அத்தலைப்பில், காலமும் கணக்கும் எல்லையும் பிற வரையறை அனைத்தையும் கடந்த அம்மை அப்பரைக் காண முயலுகின்றேன். சிறு குழந்தை கடற்கரையில் கையில் ஒட்டிய மணலை எண்ணமுயன்று, கடற்கரை மணலை எண்ணிக் கணக் கிடுவேன் என்று கருதும் வகையில் என் பேச்சுக்கள் அமைகின்றன. அம்மை அடித்தால்', 'அப்பன் அடித்தால்' 'இரண்டையும் பெற்ற ஆன்மா', 'அண்டத்தின் சுழற்சி' என்ற நான்கு தலைப்புக்களில் பேச்சுக்கள் அமையும். எல்லாச் சமயங்களும் ஏற்ற முப்பொருள் உண்மை’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், சிவன், அதனுடன்