பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 109. கொடுமையிலிருந்து மீள வழி இ ல் ைல யா என அவனையே வேண்டிக் கேட்டனர். அவர் ஐவரும் திரெள பதியும் தத்தம் உள்ளத்தில் உள்ள உண்மையான கருத்துக் களைச் சொன்னால் பழம் மறுபடி மரத்தில் ஒட்டிக் கொள்ளும் என்கிறார். இதனால் கண்ணன்-உலகுக்கு ஒர் உண்மையை உணர்த்த நினைக்கிறார். நாம்.கண்ணில் காணும், பொருள்களின் தோற்றத்திற்கும் செயலுக்கும் உள்ள நெகிழ்வுக்கும் மாறுபாடு, உண்டு என்பதை உணர்த்த நினைக்கிறார் அத்தகைய உள்ள நெகிழ்வு தான் மனிதனை மனிதனாகக் காட்டுவது என்பதையும் புலப்படுத்துகிறார். “எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் படடாலும முத்தர் மனம் இருக்கும் மோனத்தே . வித்தமாய்க்: காதி-விளையாடி இருகை வீசி வந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான்' என்று உவமை வாயிலாக மெளனத்தில் மனம் பதிந்த முத்தர் நிலையை நமக்கு இப்பாடல் அறிவுறுத்துகின்றது. ஆம்! ஒருவர் புறச்செயல்களைக் கண்டு அவரை இகழ் தலாகாது. 'கணை கொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்' என்று வள்ளுவர் கூறியாங்கு வினைவழியால் அன்றிப் புறத்தோற்ற நெறியால் அறுதியிடுதல் தக்கதாகாது. இதே நிலையில் பழம் பொருந்துவற்குப் பாண்டவரில் இருவர் கூறிய கூற்றுக்களைக் காணின் புறத்தில் மாற்றாரை மாய்க்கும் கோலத்தில் காணும் அவ்விருவர் தம் உள்ளப் பொலிவு எத்தகையது என்பது விளங்கும்.