பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அம்மையும் அப்பனும் பழம் பொருந்துவதற்குப் பலம் பொருந்திய வீமன் தன் உள்ளக் கிடக்கையினை உணர்த்துகிறான். 'பிறர் மனைவியரைப் பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் பிறர்வசை உரைத்தால் பெருமை அன்று எனவும பிற துயர் தன் துயர் எனவும் இறுதியே வரினும் என் மனக்கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் மறலியும் மடியும் மாறுமல் இயற்கை வலிமைகூர் வாயுவின் மைந்தன்' எனக் காட்டுவர் வில்லியார். ஆம்! இயமனையும் மாய்க் கும் வீரமுடைய-வலிவுடைய பீமன் வாயில் இருந்துதான் இச்சொற்கள் வருகின்றன. இறுதியே வரினும் என் மனக் கிடக்கை எம்பிரான் இவை எனக் கண்ணனுக்குச் சொல்லுகிறான். கண்ணனுக்கு அவன் உள்ளும் புறமும் நன்கு தெரியும். அவரிடம் உள்ளொன்று நினைத்துப் புறமொன்று பேசமுடியாது. எனவே பீமன் உள்ளத்து உள்ளதையே சொன்னான் எனக் காட்டுகின்றார். ஆம்! அவன் துரியோதனனைக் கொன்று, தன் மனைவியின் குழல் முடித்து, நாட்டை ஆள நினைப்பதாக அவன் சொல்ல வில்லை. புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்சி அளிக்கின்ற பீமனின் உள்ளம் எவ்வளவு தூய்மையானது என எண்ணிப் பாருங்கள். பிறர் மனைவியரைத் தாயாக வும், பிறர் பொருளை எட்டியாக ஒதுக்கித் தள்ளுவதாக வும், பிறரைப் பழித்தல் பெருமைக்கு மாறுபட்டதாகவும், பிறர் துயரைத்தன் துயராகக் கொண்டு அதைத் துடைக்க நினைப்பதாகவும் தான் அவன் உள்ளம் எண்ணுகிறது. இதுதானே மனிதப் பண்பு பீமன் போரில் வெற்றி கொண்டான் என்றால் அதற்குக் காரணம் அவன் வலி,