பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 111 கதை என்பன அல்ல. இத்தகைய நல்ல உள்ளமே அவனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அப்படியே மற்றொரு சகோதரனாகிய சகாதேவன் கூறியதைக் காண்போம். 'ஒருமொழி அன்னை வரம்பிலா ஞானம் உற்பவ காரணன் என்றும் தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலனுறு தாரம் அரியதின் பொறையே மைந்தர் மற்றிந்த அறுவரும் அல்லது யார் உறவு என்று இருவரில் இளையோன் மொழிந்தனன் தன்ப்ேர் இதயமா மலர்க்கிடை எடுத்தே' என்று வில்லியார், அவன் இதய மலரிலிருந்து அவனுடைய உள்ளக்கருத்து-உண்மைக் கருத்து வெளிவரக் காண் கிறார். சத்தியத்தையே தாயாகவும், அறிவையே தந்தை யாகவும், கருணையினையே துணைவனாகவும், செயலாற் றும் கரும நெறியே தோழனாகவும், சாந்த நிலை யினையே வாழ்க்கைத் துணையாகவும் பொறுமை யினையே மக்கட் செல்வமாகவும் அன்றோ அவன் உ ள் ள ம் கொள்ளுகின்றது. போக்க்களத்து - குரு ஷேத்திரத்து-மாற்றாரை மடிப்பதே வாழ்வு என அவன் கருதவில்லை. பிற கொடுமைகளை அவன் உள்ளம் எண்ணவில்லை. அவன் நிறை மனிதன்-எனவே இந்த நல்ல உறவினர்களையே அவன் கொள்ளுவான். அது மனிதப் பண்பல்லவா! சகாதேவன் பாரதப்போரினை விரும்பவில்லை. அதைத் தடுக்கவே நினைத்தான். தனி யாக அவனைக் கண்ணன் அழைத்து அவன் கருத் தினைக் கேட்கிறான். ஆனால் அவன் கருத்துப்பநடக்கப் போவதில்லை என்பதையும் கண்ணன் ஒரு முடி வோடே அங்கே வந்துள்ளான் என்பதையும் நன்கு உணர்ந்த ஞானி-சகாதேவன். -