பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 12 என்று கூறும்போது, இறைவனைப் பெண்ணோர் பாகம் தன்னை' என்று அவன் அம்மையப்பனாக அருளும் காட்சியைக் காட் டி, அவன் கருணையைப் போற்று கின்றார். - மதுரையில் ஒருநாள். பாண்டியன் படையோடு வேட்டையாடச் செல்கின்றான். அப்பகுதிக்குத் தலைமை தாங்கியிருந்த பன்றி அரசன் அதைக் கேள்வியுற்று, தானே அப்படையை எதிர்க்க முன் வருகின்றது. அப் பன்றியும் அதன் பேடையும் பேசும் பேச்சு, உயிரினத்தில் எங்கோ இருக்கும் அவை மனித ஆன்மாக்களுக்கு அறி வுறுத்தும் வகையில் அமைகின்றது. இங்கே அது சற்றே புறம்பாக உள்ளது எனினும் அதன் தன்மை கண்டு தாமும் உய்ய வழி உண்டாதலால்-எப்படி அம்மை அப்பர் இணைந்துள்ளனரோ அப்படியே அவை இரண்டும் இணைந்து செயல்படு நிலை நமக்குப் பாடமாக அமை கின்ற காரணத்தால் இங்கே சொல்ல நினைக்கின்றேன். போருக்குப் புறப்படுகின்ற ஆண் பன்றி தன் துணையை நோக்கி, 'இன்று பாண்டியனைப் போரிட்டு - இருஞ்சம ராடி வென்று வன்திறல் வாகையோடு வருவனேயோ அன்றிப் பொன்றுவனேயோ! நீ உன் புதல்வரைப் - பாதுகாத்து நன்று இவண் இருத்தி என்ன தங்கைப்பேடு இன்ன கூறும்' (25). அ-8