பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் îi 'Ma என்ற வேர்ச்சொல்லிலிருந்து அள அல்லது ஆக்கு (to measure or make) argårp QLTCŞār ā(5th flanavujá, பிறந்தது என்பர். மாதா என்ற வடமொழிச் சொல்லும் அத்தகைய பொருளோடு மேலும் சிறந்த வகையில் பொருள் கொள்ள அமைவது என்பர் அறிஞர். ஆங்கில (pid Gul -QuenyÉluqů (Indo Europeon Languages) QËGGIT ஐரோப்பிய குடும்பத்தில் சேர்ந்தன எனவும் அவற்றுள் முன்னதாகிய வடமொழியில் உள்ள மாதா என்பதே ஆங்கிலத்தில் மதர் "Mother' என அமைந்ததெனவும் கூறுவர். எல்லாச் சமயங்களும் எல்லா நாடுகளும் அன்னைக்கு முதலிடம் கொடுக்கின்றன. ஆம்! அவளின்றி வாழ்வு ஏது? இறைவனைப் பாடும் அடியவர்கள் அவனைப் பெற்றவர்களாகவே காண்கின்றனர். அப்பர் அடிகளார் 'ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றின ராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்' என்றும் 'அப்பன் நீ அம்மை நீ ஐயனும்நீ என் அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ" என்றும் பாடுவர். மணிவாசகர், 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே' என்றும், - 'தாயாய் முலையைத் தருவானே' என்றும், - "தாதாய் மூவாழ் உலகுக்கு தாயே என்றும் பாடுவர். 9