பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 135 மேலை வானவரும் அறியாத தோர் கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே உனை என்று கொல் காண்பதே' என்கின்றார். தொங்கும் உலகு, அதற்கு மூல காரண மாகிய விசும்பு இவை எத்தனை எத்தனையோ கால மாக வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றன. எனவே அண்ட எல்லையினையும் கால எல்லையினையும் அறிய முடியா நிலை உள்ளது. அவை யாவும் இறைவனை யும் ஒத்தன என்பதைத்தான் மணிவாசகர் இவை வந்து போம் காலமே' என ஆண்டவனையே அந்த வரை யறுக்க முடியாத காலமாகக் காட்டி அழைத்து, அதன் திறத்தினை என்று காண்பதென வியக்கின்றார். - இங்கே மற்றொன்றும் காட்ட வேண்டியுள்ளது. இன்றைய விஞ்ஞானிகள் இன்றும் காணமுடியாதநேற்று முயன்று கண்டு பிடித்த பல உண்மைகளை நம் தமிழறிஞர் என்றோ கண்டனர் என்றேன். அவற்றுள் உள்ளன. இந்த எல்லை கடந்த ஞாலமும் காலமும் அண்ட மும் ஊழியும். அப்படியே பிறக்கு முன் கருவின் நிலை காண ஏழாம் நூற்றாண்டிலேயே முறைப்படுத்தி அப்பரடிகள் காட்டுகின்றார். மனித உடம்பில் முன் தோன்றியது நரம்பா? எலும்பா? என்ற வினா இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை விடை காணா வகையில் இருந்ததை அறிவியலாளர் அறிவர். ஆனால் அப்பர் அன்றே முதலில் தோன்றியது நரம்பு என்பதைத் திட்ட மாகக் காட்டி விட்டார். அத்துடன் அக்கரு எப்படி எப்படிமுறையாக வளர்கின்றது என்பதனை, இன்றைய 'X Ray'யும் காட்ட முடியாததைத் தெளிவாகக் காட்டி விட்டார். கருவாகிக் குழம்பிருந்து கலித்துமூளை கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து •, . ஒன்றாகி