பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 137 அனைத்தும் அணுவென நிற்க நாம் காணும் உலகைப் பெரிதாகக் காட்டுவதும் போற்றுவதற்குரித்து எனவே இது போன்று நம்பைச் சுற்றியுள்ள -அறிவியற் பொருள் கள்- அல்லாதன அனைத்தும் நமக்கு எத்தனையோ உண்மைகளை உணர்த்திக் கொண்டுள்ளன. இனி மேலே காண்போம், இவ்வாறு அண்டங்களிலும் ஐம்பூதங்களிலும் உயிர்க ளிடத்தும் உள்ளவன் அந்த ஒப்பற்ற அம்மை அப்பனே என்ற உண்மையினை அடியவர் பலர் பலவாறாகக் கூறி யுள்ளனர். முன்னர்.சில குறித்தோம். இங்கேயும் இரண் டொன்று காணலாம்

திருமங்கையாழ்வார், பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற - இமையவர்தம் திருஉருவே; எண்ணும் போது ஒர் உருவம் பொன் உருவம் ஒர் உருவம் செந்தி ஒன்று மாகடல் உருவம் ஒத்து நின்ற மூவுருவம் கண்டபோது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே (2) y என்று திருநெடுந் தாண்டகத்தில் கூறுகின்றார். இதில் இறைவன் யாவுமாய் நின்ற காரணத்தால், நாம் வணங்கும் மூன்று நிலை கொள்ளும் மும்மூர்த்திகளும் 9-سم۔ ہرے