பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டத்தின் சுழற்சி 139 என்றும் பாடிக் களிக்கின்றார். இதில் முதல் பாட்டில் ஆதிகாலம் தொட்டு அண்டங்கள் ஒன்றற்கொன்று இடிபட்டு அழிவதையும் மாறுவதையும் பஞ்சபூதச் செயல்கள் படும்பாட்டையும் காட்டுகின்றார். அடுத்ததில் கால எல்லை கணக்கிட முடியாத நிலையில் எத்தனையோ உலகங்கள்-மேல் கீழ் நடு என நின்ற உலகங்கள் நிர்மூல மாவதையும் அங்கேதான் கடவுள் மெளன உருவாய் உள்ளான் என்பதையும் அங்கே அம்மை அப்பனாக இரண்டுருவம் ஒன்றாய் இசைந்து ஆனந்த நடமிடும் சிறப்பினையும் காட்டுகிறார். இவ்வாறு காலமெலாம் கணக்கிட முடியாது கழிந்த ஊழிகள் பலப்பல. இவற்றை எண்ணிப்பார்த்த கீரந்தையார் என்ற சங்க காலப் புலவர்-திருமால் உருவினைப் பாடவந்த நிலையில் இக் காலமும் கணக்கும் நீத்த தன்மையினை விளக்குகிறார் 'பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல கருவளர் வானத் திசையில் தோன்றி உருவு அறிவரா ஒன்றன் ஊழியும் முந்துவளி கிளர்ந்த ஊழும் ஊழியும் செந்திச் சுடரிய ஊழியும், அவையிற்று உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு மீண்டும் பீடு உயர்பு ஈண்டி யாவற்றிற்கும் உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும் நெய்தலும், குவளையும், ஆம்பலுபி, சங்கமும் செய்குறி ஈட்டங் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு ஊழி யாவரும் உணரா . ஆழி முதல்வ நிற்பேணுதும் தொழுது (பரிபாடல் 2)