பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அம்மையும் அப்பனும் அடிகளே உனது அடியவர்சீர் அடியேன் உரைத்திட அடி எடுத்து இடர் கெடுத்தருள் வாயெனத் திருவருளை ... - எண்ணி இறைஞ்சினார்’ (31) இவ்வாறு சேக்கிழார் இறைஞ்ச இறைவன் அடி எடுத்துக் கொடுத்தார். 'அலைபுனல் பகீரதிநதிச் சடையாட - வாட அரவாட நின்று இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு 'உலகெலாம் எனஅடி எடுத்துரை செய்த . பேரொலி ஒசை மிக்கு இலகுசீர் அடியார் செவிப்புலத்து எங்குமாகி றைந்ததால்' * (31) என்று அவர் இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றார். பின்னும் இப்பெரிய புராணம் பாடச் சொல்லிய அனபாயனுக்கு இறைவன் தான் அடி எடுத்துக் கொடுத்த தைக் குறித்து, அதை அரங்கேற்றச் சொல்லுகின்றார். சேக்கிழான் நமது தொண்டர் சீர்பரவி நாம் மகிழ்ந்து உலகம் என்று நம வாக்கினால் அடிஎடுத்து உரைத்திட வரைந்து நூல் செய்து முடித்தனன் காக்கும் வேல்வளவ! நீ இதைக் கடிது கேளெனக் கனக வெளியிலே ஊக்கமான திருவாக்கு எழுந்தது திருச்சிலம் பொலியும் உடன்எழ' (64)