பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 145 என்று உமாபதி சிவம் இந்நிகழ்ச்சியினை அழகுறக் காட்டு கிறார். இந்த 'உலகெலாம் என்ற தொடரின் சிறப்பை அண்மையில் வாழ்ந்த வள்ளலார் எவ்வெவ்வாறு பாராட்டுகிறார் என்பதைப் பின்பு காணலாம் நல்லவர்கள் காவியமோ கவிதையோ பாடினால் முதலில் நிற்பது உலகம் என்று கூறினேன். இதற்கு மேலே கண்ட சேக்கிழார் மட்டும் சான்று என்று எண்ண வேண்டா? இன்னும் பலர் உளர். கம்பர் தம் பெருங் காப்பியமாகிய இராமாயணத்தைத் தொடங்கு முன், 'உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இறைவனை வாழ்த்தியே தொடங்குகிறார். இரு வரும் உலகம்’ என்னாது உலகமெலாம்' என்றும் உலகம் யாவையும் என்றும் கூறுவதன் சிறப்பினையே நாம் இங்கு எண்ண வேண்டும். அண்ட கோளங்கள் அளப் பரியன. அதில் அதன் சுழற்சியில் தனித்தனியாகச் சுழன்று வரும் உலகங்கள் எண்ணற்றன. அவற்றின் செயல், தன்மை, தோற்ற மறைவு, பிற நிகழ்ச்சிகளைப் பற்றி இது வரையில் யாரும் அறியவில்லை அறியவும் முடியாது. இத்தகைய உருளும் உலகங்களையெல்லாம் ஒன்றாக விளக்கவே இருவரும் உலகெலாம் என்றும் உலகம் யாவையும்' என்றும் பாடித் தத்தம் காவியங்களைத் தொடங்குகின்றனர். சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்' என்கின்றார். ஆம்! அண்ட கோளங் களின் எல்லையில் அமைந்த உலகங்களையெல்லாம் யாரால் உணர்ந்து அறிய முடியும்? யாரால் கணக்கிட முடியும்? அவை அனைத்தையும் ஆக்கி அவற்றிற்கு உள்ளே அமைந்து, புறத்தும் யாண்டும் நிறைந்துள்ள