பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 13 கட்டுண்டிருந்த எனை வெளியில் விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கிடைந்த - பேரிட்டு மெய்யென்று பேசுபாழ் பொய்யுடல் பெலக்க வினை அமுதமூட்டிப் பெரிய புவனத்திடை போக்கு வரவுறுகின்ற பெரிய விளையாட்டு இசைத்திட்டு ஏரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்டு இடர்உற ஒறுக்கி இடர்தீர்த்து இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில் இசைந்து துயில் கொள்மின் என்று ரிட்ட உலகன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தக்கிணா மூர்த்தியே சின்மயா னந்த குருவே' என்பது அவர் அன்னையை நமக்குக் காட்டும் பாடல். இங்கே யாண்டும் நிறைந்த பராபரை உலகன்னையாக நம்மை எப்படி ஒம்புகிறாள் என்பதை அவர் விளக்கு கிறார். நன்றாக வளர்க்கின்ற அன்னை குழந்தை தவறு செய்தால் பொறுக்கமாட்டாள். வருங்காலத்தின் தன் மகன் வளமான வாழ்வினைப் பெற்றுச் சான்றோனாக விளங்க வேண்டும் என ஆசை கொண்டு அன்போடு வளர்க்கின்ற தாய், அவன் தவறு செய்தால் பொறுப் பாளோ? ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்' என்று வள்ளுவர் தாய் உள்ளத்தை விளக்கிக் காட்டுகின்றாரே! ஆம்! அதனாலே அவன் தவறு செய்தால் நமனை விட்டு ஒறுக்கி’ என் கின்றார் தாயுமானார். ஆனால் அவனை-அவ்வுயிரை இடர்தீர்த்து இராப்பகலன்ற இடத்தே-இறைவனொடு இரண்டறக் கலக்கும் இன்ப நிலையில் வைப்பார் என்று அவள் தன் அறக் கருணையாக அமைவதைக் கடைசியில் காட்டுகின்றார். எனவே அம்மை அடிக்கிறாள் என்றால் அது அறக்கருணையாக மலர்ந்து உயிர்களை உய்விப் பதே எனக் கொள்ளல் வேண்டும்.