பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 లిiదిul அப்பம் தரும் வாடையும் நல்வாடையாயிற்று'-ஏன்? அதுவும் உலகை உய்விக்கலான். - உலகம் உய்யக் குறள் இயற்றிய திருவள்ளுவர், 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்கின்றார். இதில் அகரம் எழுத்துக்கெல்லாம் முதன்மையாகும் என்கிறார். நாம் காணும் உண் மையை உவமையாகக் காட்டி ஆதி பகவனையும், இடைப்பட்ட அண்டத்தினையும் அதன் அங்கமாகிய உலகினையும் குறித்தே தம் பெருநூலைத் தொடங்கு கின்றார். எழுத்தெல்லாம்' என்பதற்கு, தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி 'உலக மொழிகளில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும், எனப் பொருள் கொள்ளல் பொருந்தும். 'அ' ஒலி கொண்ட எ எனும் ஆங்கில மொழியும் 'அ' எனும் முதல் எழுத்தினைக் கொண்ட வடமொழியும் அவை சார்ந்த பிற உலக, மேநாட்டு, கீழ்நாட்டு மொழிகளும் இந்த எழுத்தெல் லாம் என்ற தொடருக்குள் அடங்கும் தன்மையினவே. நாம் காணும் நம் வழக்கில் உள்ள தமிழை முன் வைத்து, காணாத அல்லது தெரியாத பிற எல்லா மொழிகளையும் நமக்குக் காட்டி, உள்ளடக்கி, எழுத்தெல்லாம்' என் பதைப் போன்று, காணும் இவ்வுலகினைக் காட்டி, இந்த உலகு ஒர் அம்சமாக உடைய அண்டத்தினையும் பிற பல அண்டங்களையும் உள்ளடக்கி, உலகு ஆதிபகவன் முதற்று' என்கின்றார். எனவே வள்ளுவர் உலகச் சுழற்சி யாகிய சமுதாய வாழ்வுக்கேற்ற பாடல்களை-குறட்பாக் களை மட்டும் எழுதாது உலகங்களையும் அண்ட கோளங் களையும் அவற்றை எல்லாம் ஆக்கி, காத்து மறைக்கும் அருள் நெறிப்பாடல்களாக அவை விளங்குமாறு ஆக்கி யுள்ளார். ஒர் உவமை முகத்தான், செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது’ என்று