பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டித்தின் சுழற்சி 153 கண்டு பெருவிளக்கம் தருகின்றார். முதலாவதாக அந்தப் பாடலை எழுதி அதற்குத் தனிப்பொருள் விளக்கம் தந்து, பின் பல வகையில்-பல முறையில் விளக்கங்களைத் தந்து கொண்டே போகின்றார். தம்மை மறந்து, உலகம் உய்யவே வந்து வாழ்த்த-வாடிய பயிரைக் கண்டபோது வாடிய, காலின் மேல் கால்வைக்கப் பயந்து அமைதியாக ஆண்டவனைச் சோதி வடிவில் கண்டு, நம்மை எல்லாம் காண வாரும் என அழைத்துத் தாமே கடவுளாக அமைந்த அருள் பெருஞ்சோதி கண்ட வள்ளலார், இந்தப் பாட்டிற்கு உரை காண்பதை முதலில் கண்டு மேலே செல்வோம். மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் 'உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கமென்பது எங்ங்னமெனில்: திருவருளின்பத்தை அங்கைக் கனியிற் பெற்ற பெரி யாரையும், அத்திருவருளையும் வாச்சிய லட்சியமாகக் கொண்ட பெரியபுராணத்தில், தெய்வத் தற்சிறப்புச் செந்தமிழ்ச் செய்யுட்கண் எல்லாம் வல்ல 'இறைவன் திருவருளால் எடுத்துக் கொடுக்கப்பட்ட 'உலகெலா முணர்ந்தோதற்கரியவன்' என்னும் மெய்ம்மொழியினது பொருள் விளக்கமாகலின் மெய்ம்மொழிப் பொருள் விளக்கமென்றாயிற்று என்க. இனி, இம் மெய்ம்மொழிக்குப் பொருள் விளக்கங் கூறுதும்; 'உலகெலா முணர்ந் தோதற் கரியவன நிலவு லாவிய நீர்மலி வேணியன் 10-ہو