பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150. அம்மையும் அப்பனும் கேட்டு உணர வைக்கிறது. உணர்கிறோம். உணர்ந்து அவற்றின் வழியே செயலாற்ற முயல்வோமாக! இம்மாதத்திய நான்கு சொற்பொழிவுகளில் என்றும் உள்ள பதி, பசு, பாசம் ஆகிய அண்டத்தின் சுழற்சி ஆகிய வற்றை அப்பனாகவும், அம்மையாகவும், இரண்டையும் பெற்ற ஆன்மாவாகவும் உலக நெறியாகவும் கண்டோம். இவற்றால் அடித்தடித்து அக்காரம் தீற்றிய-தீற்றி மக்களை ஆன்மாக்களை - உயிர்களைத் தன் வழிப் படுத்தும் இறைவன் கருணை உள்ளத்தையும் அவ்வுள்ளத் தில் இடம் பெற்று என்றும் வாழ்கின்ற வரம் பெற்ற நல்லவர் தம் வாழ்க்கை நெறிகளையும் கண்டோம். இவற்றையெல்லாம் காட்டியும் காணவும் ஆதாரமாகிய அண்டத்தின் தன்மையினையும் அதில் உள்ள தூசாகிய நம் உலகத்தின் தன்மையினையும் அதில் வாழும் நம் உயிர் களின் நிலையினையும்-ஒரறிவு தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரை அமைந்த அவற்றின் நிலைகளையும் அவை தவறின் இறைவன் அடித்துத் திருத்தும் அருள் நிலையினை யும், அவற்றால் நாம் பெறும் பேற்றினையும் கண்டோம். எனவே இம்முப்பொருள் உண்மையை-பதி-பசு பாசத் தின் தன்மையை உணர்ந்து, இம்மூன்றல்லால் வேறு. இல்லை என்பதைத் தெளிந்து, உலகம் வாழ நாம் நம்மாலானதைச் செய்ய முயல வேண்டும். பாரதியார் கூறியபடி, 'நிதி.மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் மதுரத்தேமொழி மாந்தர்க ளெல்லாம்' வாணி பூசைக்கு உரியன பேசீர்! எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்"