பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 25 அணைக்கும் அன்னையாகிய பழையோள் அடிக்கிறாள் என்றால் அவள் அருள் கருதியன்றே அது அமையும். இனி அவள் அவ்வாறு அடித்தடித்து அக்காரம் தீட்டிய அருள் செயல் ஒன்றிரண்டு கண்டு அமைவோம். நாடு முழுவதும் இன்று இருபெரும் விழாக்களைக் கொண்டாடுகின்றோம். அவற்றுள் ஒன்று புரட்டாசியில் வரும் நவராத்திரி. மற்றொன்று அடுத்த ஐப்பசியில் வரும் தீபாவளி. இவை இரண்டும் நாடு தழுவிய பெருவிழாக் & Gimé (National Festivals) Glåståårl_st Li'l Qup) கின்றன. இது ஏன்? இரண்டும் அம்மையின் சீற்றத்தினை யும், அவள் மறக் கருணையினையும், அழித்து அருள் செய்த திறனையும் காட்டுவதோடு, அச்செயல் என்றென் றும் நாட்டில் நினைவுற்று-நிலைபெற்றிருக்க நினைத் தாள் என்பது தேற்றம். கொடுமை செய்த மகிஷா சூரனைச் சம்மரித்து, மகிஷாசூரமர்த்தனியாக அன்னை காட்சி தருகிறாள். அவன் ஆண்ட நாடு இன்றும் எருமை நாடு என்றே அழைக்கப் பெறுகின்றது. எப்பொருளும் அழிவதில்லை என்ற கோட்பாட்டின்படி மகிஷாசூரன் பூத உடல் நிலை கெட்டாலும், அவன் உயிர் அன்னையின் அடியில் ஒன்றி, அவன் அன்னை யுடன் போரிட்ட நாள்களையும் அவன் அவள் அடி அடைந்து, நலமுற்ற நாட்களையும் . என்றென்றும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றதல்லவா! பெரு வரம் பெற்ற அவனை நிலைகுலையச் செய்ய, மற்றவர் சிந்தித்த போது, அன்னையே காளியர்கி-துர்க்கை யாகி-மகிஷாசூரமர்த்தனியாகி, அபயம் கொடுத்துட நலம் கண்டு நானிலத்தை வாழச் செய்து, அந்நாட்களை யும் விழா நாட்களாகக் கொண்டாடச் செய்தனள். தீபாவளியும் அப்படியே! நரகாசூரன் பெற்ற வரத் தால் நாட்டில் பேரிடர் இழைக்க, அவனை நிலைமாற்றித் அ-2